ஸ்டைலாக குத்த வைத்த கேப்ரில்லா.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: ஸ்டைலாக போஸ் கொடுக்கிறேன் என காலை மடக்கி குத்த வைத்து இருக்கும் கேப்ரில்லாவின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் இப்படியெல்லாம் கூட ரசிகர்கள் கேட்பார்களா என யோசிக்கும் வகையில் கலாய்த்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள்.
என்னதான் ஆட்டம் போட்டாலும் சிலர்தான் பார்த்ததும் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டு விடுகின்றனர் .அந்த மாதிரிதான் 3 படத்தில் அறிமுகமானார்.
தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார் கேப்ரில்லா. இவருடைய குழந்தைப் பருவத்திலேயே திரைப்படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது என்னவோ இணையதளத்தின் மூலமாக தான் .

கேப்ரில்லா
அதுவும் டிக்டாக் ,இன்ஸ்டாகிராம் ,டுவிட்டரில் பிரபலமாக இருந்த இவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வந்தனர். கேப்ரில்லாவின் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்துதான் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சியில் இளமை துள்ளலோடு துள்ளிக்குதிக்கும் மான் போல சுற்றிக்கொண்டிருந்த இவருக்கு மேலும் அதிகமாக ரசிகர்கள் உருவாக்கிவிட்டனர் .

கனவுக் கன்னி
அதனாலேயே ஒவ்வொரு வார எலிமினேஷன் ரவுண்டில் இருக்கும்போதும் இவரை ரசிகர்கள் காப்பாற்றி வந்தனர். ஆனால் இவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களை கடைசி நேரத்தில் ஏமாற்றிவிட்டு இவர் ஐந்து லட்சம் பணத்தோடு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக சிங்கிள்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

போட்டோஷூட்
இவரை அந்த நிகழ்ச்சியில் இருக்கும் கண்டஸ்டண்டுகள் இம்பிரஸ் செய்தார்களோ இல்லையோ இவரைப் பார்த்து பல இளைஞர்கள் இம்பிரஸ் ஆகிவிட்டனர் .அந்த அளவிற்கு அழகாலும் ஜொலித்து வந்த இவர் சைடு கேப்பில் மாடலாகவும் கலக்கிக் கொண்டிருந்தார். மாடலிங்கில் பொருள்களுக்கு விளம்பரம் செய்வது மட்டுமல்லாமல் போட்டோக்களையும் எடுத்து குவித்து வந்தார்.

ஹேப்பியான ரசிகர்கள்
அந்த போட்டோக்களை இன்ஸ்டா ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் இவர் பதிவிடவும் இவருடைய ரசிகர்கள் ஹேப்பி ஆகி இவரை மீண்டும் கொஞ்ச ஆரம்பித்து விட்டனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவரும் ஒரு கண்டஸ்டன்டாக கலந்து கொண்டு இருக்கிறார் .அதற்காக அடிக்கடி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் இவர் தற்போது லேட்டஸ்டாக வித்தியாசமாக இருக்கட்டுமே என ஒரு ஸ்டில் எடுத்து இருக்கிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
அதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் கன்னாபின்னாவென கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்த இவர் கால் வலிக்கிறது என குத்த வச்சு இருந்தது ஒரு தப்பா அதுக்குப் போயி இப்படி எல்லாம் கேட்கிறார்களே என அவருடைய ரசிகர்களும் புலம்பி வருகின்றனர். இருந்தாலும் ரொம்பத்தான் ஸ்டைலா இருக்குப்பா இந்த கெட்டப் போஸ்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications