Gangai Amaran: என்னை மோசமானவராக ஆக்கிட்டீங்களே! ஆனால் சிவகுமாரை விட்டுடீங்க.. கங்கை அமரன் ஆதங்கம்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவருமான கங்கை அமரன் சமீபத்தில் சிக்கிய சர்ச்சை குறித்து தற்போது நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். மறைந்த பாடலாசிரியர் வாலியின் பிறந்தநாள் நிகழ்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவருக்கு பின்னால் நின்ற ஒரு ரசிகருடன் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியிருந்த சூழலில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வாலி நிகழ்வில் நடந்த சம்பவம்
கடந்த மாதம் நடைபெற்ற பாடலாசிரியர் வாலியின் பிறந்தநாள் நிகழ்வுக்கு பிறகு கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கங்கை அமரனுக்கு பின்னால் ஒரு ரசிகர் நின்றுகொண்டிருந்தார். இதனைக் கவனித்த அவர், நீங்கள் பேசுங்கள் என்று அந்த ரசிகரிடம் கூறியுள்ளார். அதை உண்மை என்று நினைத்து பேச ஆரம்பித்த அந்த பையனை, பாதியிலேயே பேச விடாமல் கங்கை அமரன் அங்கிருந்து புறப்பட பார்த்தார். இது அந்த பையனை பெரிய சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவமே சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
கங்கை அமரன் பதில்
இந்த சம்பவம் பெரிய விவாதத்தை உருவாக்கிய சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கங்கை அமரன் கோபத்துடன் பேசினார்: "ஒரு ஆள் வளர்ந்த பிறகு அவரிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை குறிப்பிட பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர் பின்னால் நின்றுகொண்டு கேமராவை பார்த்து என்னென்னமோ செய்துகொண்டிருந்தார். உடனே அதை பதிவுசெய்து என்னை மோசமான ஆளாக ஆக்கிவிட்டீர்களே!" என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பினார்.
சிவகுமார் சம்பவம் உதாரணம்
தன்னுடைய செயலைச் சமன் செய்வதற்காக, "நடிகர் சிவகுமாரும்தான் ஒரு சமயம் செல்போனை தட்டிவிட்டார். யாராவது ஏதாவது செய்தீர்களா?" என்று கேள்வி எழுப்பி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.
இசையால் கலக்கிய கங்கை அமரன்
கங்கை அமரன் இளையராஜாவின் சகோதரர் என்ற அடையாளத்தை கடந்து, கோலிவுட்டில் ஆகச்சிறந்த பாடல்களை வழங்கியவர். இசை என்றாலே இளையராஜாதான் என்று இருந்த காலத்தில் கூட, சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் இன்னமும் ரசிகர்களின் விரும்பிய பாடல்கள் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வயது காரணமாக சினிமாவில் அதிகம் செயலற்றவராக இருந்தாலும், சமீபத்தில் லெனின் பாண்டியன் படம் மூலம் முழுநேர நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், தற்போது அவர் மீது எழுந்துள்ள இந்தச் சர்ச்சை விவாதங்களைத் தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications