Gangai Amaran: இப்படி பார்த்தால் எப்படி? பிரஸ் மீட்டிங்கில் கோபமான கங்கை அமரன்.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சென்னை: இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பல முகங்களை உடையவருமான கங்கை அமரன், பொது நிகழ்ச்சியொன்றில் ஒரு ரசிகரிடம் நடந்துகொண்ட விதம் இப்போது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கூலாகவும் ஜாலியாகவும் பேசக்கூடியவர் என்று பெயர் எடுத்தவருக்கு ஏன் இந்த ஆவேசம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

கங்கை அமரனின் சினிமா பயணம்
கங்கை அமரனுக்குச் சினிமா பின்னணி இருந்தாலும், அவர் தன்னோடத் திறமையாலேயேப் பலத் துறைகள்லக் கெத்து காட்டியவர். இளையராஜா இசையமைப்பாளராகப் பாதை தேர்ந்தெடுக்க, கங்கை அமரனுக்கு பாடலாசிரியராக ஆகணும்னு ஆசை. இளையராஜா இசையமைத்த பல பாடல்களை இவர்தான் எழுதினார்.
ராமராஜனை வைத்து இவர் இயக்கின 'கரகாட்டக்காரன்' படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறைந்த பட்ஜெட்ல எடுத்தாலும், அதிக வசூல் ஈட்டியப் படங்கள்ல அதுக்குன்னு ஒரு தனி இடமே இருக்கு. இவரை போலவே, இவரோட மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இப்போ சினிமாவுலச் சக்ஸஸ்ஃபுல்லா வலம் வந்துக்கிட்டு இருக்காங்க.
பொதுவா, கங்கை அமரன் ரொம்ப ஜாலியாப் பேசக்கூடியவர். ஆனா, அந்த ஜாலித்தனம் சில சமயங்கள்ல அவரைச் சர்ச்சையிலும் மாட்டிவிட்டிருக்கிறது. இப்போ நடந்த சம்பவமும் அப்படிதான்!
வாலி விழாவில் நடந்த சர்ச்சை
சமீபத்தில், மறைந்தக் கவிஞரும் பாடலாசிரியருமான வாலியின் நினைவுதினத்தை முன்னிட்டு ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கங்கை அமரன் மற்றும் மாலன் ஆகியோருக்கு விருதும் வழங்கப்பட்டது.
விழாவை முடிச்சுட்டுச் செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால ஒரு ரசிகர் அமைதியா நின்றுகொண்டிருந்தார். கங்கை அமரன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மாலனைத் தேடிப் பின்பக்கம் திரும்பினார். அப்போ அந்த ரசிகரைப் பார்த்தவர், "வாருங்கள் நீங்கள் பேசுங்கள்" என்று சொன்னார். அந்த ரசிகரும், 'உண்மையிலேயே பேசச் சொல்கிறார் போல'ன்னு நினைச்சுப் பேசத் தொடங்கும்போது, கங்கை அமரன் அங்கிருந்துச் செல்ல முற்பட்டார்.
அவமானம்
இதைப் பார்த்துப் பதறிய ரசிகர், உடனே அவரை அழைத்து, 'நீங்களே பேசுங்கள்' என்றுச் சொல்லிவிட்டார். பிறகுப் பேச ஆரம்பித்த கங்கை அமரன், அந்த ரசிகரை நோக்கி, "யாராவது பேசும்போது இப்படித்தான் பின்னாடி நின்று எட்டி எட்டிப் பார்ப்பதா? இந்தப் பழக்கத்தை எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்"என்றுச் சொல்லிவிட்டார். ஒரு நிகழ்ச்சிக்கு முக்கியமானத தகவல்களை பேச நீங்க சொல்கிறீர்கள் என்றால் அவர்களை மட்டும் பிரேமில் நிற்க வையுங்கள் மற்றவர்களை தள்ளி நிற்க சொல்லுங்கள். அப்படி நின்றால் தானே அந்த வீடியோவை பார்க்கும் போது நல்லா இருக்கும் என்று கங்கை அமரன் பேசி இருக்கிறார்.
குவியும் கண்டனங்கள்
கங்கை அமரன் சொன்னதைக் கேட்டு அந்த ரசிகர் ரொம்ப தர்ம சங்கடத்தை உணர்ந்து, பாவத்தோடு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோதான் இப்போப் பயங்கரமாக ட்ரெண்டாகிட்டு இருக்கு.
சமூக வலைதளங்கள்ல பலரும், "கங்கை அமரனுக்கு இத்தனை வயதாகியும் பக்குவம் இல்லையே. அந்த ரசிகர் அமைதியாகத்தானே நின்றுகொண்டிருந்தார். இப்படி அவரை அவமானப்படுத்தி இருக்கக்கூடாது" என்றுச் சொல்லித் தங்களுடையக் கண்டனத்தைத் தெரிவிச்சிருக்காங்க. பொதுவெளியில ஒரு ரசிகரோட ஆர்வத்தை இப்படிப் புண்படுத்தியிருக்கக் கூடாதுன்னு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய வருத்தத்தை இந்த காட்சி ஏற்படுத்தியிருக்கு!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications