Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென மயங்கி விழுந்த கங்கை அமரன்.. மருத்துவமனையில் அனுமதி! தற்போது நிலை இதுதான்! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்டு விளங்கும் கங்கை அமரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் உடன் பிறந்த சகோதரரான கங்கை அமரன் ஆரம்பத்தில் இளையராஜாவிற்காக உதவிகளை செய்து வந்த நிலையில் பிறகு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். அதோடு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று பல திறமைகள் கொண்டு விளங்குகிறார்.

ganga amaran

வெள்ளி திரையில் இவர் பல திரைப்படங்களில் பணியாற்றி இருந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு பல குழந்தைகளுக்கு புத்துணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். அதோடு பாடல் பாடி ஜெயிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கும் குழந்தைகளுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அவர்களுடைய குறைகளையும், நிறைகளையும் கூறி அவர்களை மேன்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ganga amaran

இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன் சிறந்த இயக்குனராக பிரபலமடைந்திருக்கிறார். அதிலும் நடிகர் பிரபு நடிப்பில் வெளியான கோழி கூவுது படத்தின் மூலமாகத்தான் கங்கை அமரன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

ganga amaran

அண்ணனுக்கு தம்பி சலித்தவர் இல்லை என்று கங்கை அமரனும் தன்னுடைய தனித்துவத்தால் இப்போதும் மின்னிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் 77 வயதாகும் கங்கை அமரன் நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியேறி உள்ளது.

ganga amaran

அதாவது கங்கை அமரன் நடித்து வந்த திரைப்படம் சிவகங்கை அருகே படமாக்கப்பட்டது. அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது கங்கை அமரனுக்கு திடீரென உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அதை தொடர்ந்து பட குழுவினர் மதுரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பிறகு அவருக்கு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ganga amaran
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+