ரஜினிகாந்த்தால் கோபத்தில் இளையராஜா.. அதற்காக சொந்த தம்பினு கூட பார்க்கலையே... கங்கை அமரன் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஜெயிலர் திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்தும் தன்னுடைய அண்ணன் இளையராஜா பற்றியும் கங்கை அமரன் பகிர்ந்துள்ள பல தகவல்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்த் இளையராஜா இருவருக்கும் இடையேயான நட்பு குறித்தும் அவர்களுக்கிடையே உண்டான பிரச்சனைகள் பற்றியும் பல விஷயங்களை கூறியுள்ளார்.

Gangai Amarans information about Rajinikanth and his brother Ilayaraja between Ilayaraja and the problems

அந்தக் காலத்தில் ராமராஜன் மற்றும் பிரபுவை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியிருக்கும் கங்கை அமரன், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற மிகப் பெரிய நடிகர்களிடம் மிக எளிதில் கால்ஷீட் வாங்கும் நிலையில் இருந்தாலும் அவர்களை வைத்து தன்னால் படம் இயக்க முடியாத காரணத்தை கூறியுள்ளார்.

தங்களது குடும்ப தயாரிப்பு நிறுவனமான பாவலர் கிரியேஷன் சார்பில் ரஜினிகாந்தை வைத்து ராஜாதி ராஜா மற்றும் கமலஹாசனை வைத்து சிங்கார வேலன் போன்ற திரைப்படங்களை தயாரித்த சமயத்தில் தனக்குத்தான் அவர்களது படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தனது அண்ணன் இளையராஜா இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்களுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குக்காக எனக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.

Gangai Amarans information about Rajinikanth and his brother Ilayaraja between Ilayaraja and the problems

ராஜாதி ராஜா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது இயக்குனர் சுந்தர்ராஜன் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைக்காத ரஜினிகாந்த் இளையராஜாவிடம் உங்களது தம்பி கங்கை அமரனை வைத்து படத்தை எடுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் இளையராஜாவோ இயக்குனர் சுந்தர்ராஜன் மீது இருந்த நம்பிக்கையால் ராஜாதி ராஜா படத்தை சுந்தர்ராஜன் அருமையாக எடுப்பார் என்றும், இல்லையென்றால் தான் ஆர்மோனிய பெட்டியில் கை வைப்பதையே நிறுத்தி விடுகிறேன் என்றும் சபதத்தோடு கூறியுள்ளார். இளையராஜா கணித்தது போலவே ராஜாதி ராஜா படம் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்தது.

அடுத்தடுத்து ரஜினியின் வெற்றி படங்களுக்கு இசையமைத்து வந்த இளையராஜா வீரா படத்திற்கு பின்பு ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைக்காததை குறித்து கங்கை அமரன் கூறும் பொழுது பாட்ஷா படத்தின் போது இளையராஜா சம்பள விவகாரங்களில் ரஜினிகாந்த் தலையிட்டதாகவும், இதனால் உணர்ச்சிவசப்பட்ட இளையராஜா உங்களுக்கான சம்பளத்தை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள்.

Gangai Amarans information about Rajinikanth and his brother Ilayaraja between Ilayaraja and the problems

எனக்கான சம்பளத்தை தான் நான் கேட்கிறேன் இதில் தாங்கள் தலையிடாதீர்கள் என்று ரஜினியிடம் கூறியுள்ளார். இதனால் படக்குழு மிகப்பெரிய அதிருப்தி அடைந்ததாகவும், இந்த விவகாரங்களுக்கு பிறகு தான் இளையராஜாவிற்கு பதில் தேவா கமிட் ஆனதாகவும் அதன் பிறகு இளையராஜா ரஜினி படங்களுக்கு இசையை அமைக்காததும் காரணமாய் இருந்ததாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நட்பு வட்டாரத்தில் எனக்கென ஒரு தனி இடம் உண்டு என்று கூறியுள்ள கங்கை அமரன் எங்கு வெளியில் சென்றாலும் தான் உடன் வருவதையும் பாடுவதையும் ரஜினி மிகவும் விரும்புவார் என்றும்,ஆனால் பாட்ஷா பட சம்பவத்திற்கு பின்பு நான் ரஜினிகாந்த் சந்திப்பதை அண்ணன் இளையராஜா அவ்வளவாக விரும்பவில்லை என்றும் எனக்கு வாய்ப்பு கேட்கத்தான் ரஜினிகாந்தை சென்று சந்திக்கிறாயா என என்னை திட்டுவார் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+