Gautham Karthik: கார்த்திக்கு இதுதான் பிரச்சனை! வீல் சேரில் போகும்போது, உடல்நிலை குறித்து மகன் கௌதம் உருக்கம்
சென்னை: சோசியல் மீடியாவில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக் பற்றிய செய்திகள் தான் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது. அவரை பற்றி பலர் குறை கூறிக் கொண்டிருந்த நேரத்தில் கார்த்திக்கின் மகன் கௌதம் தன்னுடைய அப்பா பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
சினிமா துறையில் ஒரு சில பிரபலங்களின் வாரிசுகளும் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு சிலரால் மட்டும் பெற்றோரை போல ஜெயிக்க முடியவில்லை. என்னதான் திறமை இருந்தாலும் அவர்கள் தங்களுடைய அடையாளத்தை வெளிகாட்டுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோலத்தான் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமும் தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அறிமுகமாகும் போது ஒரு எதிர்பாராத ஒற்றுமை அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் இருந்தது. அதாவது கடல் படத்தை இயக்கியது பாரதிராஜா, அதேபோல அவருடைய அப்பாவின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லை படத்தை இயக்கியதும் பாரதிராஜா தான்.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தது ராதா. அதேபோல கௌதம் கார்த்திக் அறிமுகமான கடல் படத்தில் ஜோடியாக ராதாவின் மகள் துளசி நடித்தார். ஆனால் இத்தனை ஒற்றுமையுடன் இந்த படம் இருந்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தன்னுடைய அப்பா கார்த்திக் பற்றி சமீபகாலமாக பரவிவரும் சர்ச்சைகள் குறித்து வருத்தம் தெரிவித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார். கார்த்திக் ஷூட்டிங்க்கு சரியா வரமாட்டாரு, கொடுத்த கால்ஷீட்க்கு நடிக்க மாட்டார் என்றெல்லாம் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள் இது அவருடைய ரசிகர்களையே வருத்தமடைய செய்த போது பெற்ற மகனை வருத்தமடைய செய்யாமல் இருக்குமா?
இது குறித்து கௌதம் கார்த்திக் பேசும்போது, என்னுடைய அப்பாவை பற்றி சில விஷயங்கள் இப்போ ஒரு சிலர் பேசிட்டு இருக்காங்க, அதை பார்க்கும்போது வருத்தமா இருக்கு. இப்ப இருக்குற சூழ்நிலை மாதிரி அப்ப கிடையாது அப்பா பணியாற்றிய காலத்தில் எல்லாருமே அண்ணன் தம்பியாகவும், மாமன் மச்சான் போல தான் பழகிக் கொண்டு இருந்தாங்க. இப்போ பொதுத்தளத்தில் இப்படி பேசுறாங்க அப்போவே நேரடியா பேசி இருக்கலாம். ஆனா இப்ப வந்து அவரை பற்றி பேசுவது வருத்தமா இருக்கு என்று பேசி இருந்தார்.
அதோடு கார்த்திக் இப்போ சினிமாவில் நடிக்காததால் அவருக்கு அந்த பிரச்சனை இருக்கு, இந்த பிரச்சனை இருக்குன்னு சிலர் வதந்தி கிளப்பிட்டு இருக்காங்க. இது பற்றிகூட கௌதம் பேசியிருந்தார். அதாவது அப்பாவுக்கு இப்போ வயசாகிட்டே இருக்கு அதனால ஒவ்வொரு வருஷமும் மெடிக்கல் செக்கப் செய்வது வழக்கம். அப்படி ஒருமுறை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகும்போது அவரால் படிக்கட்டு ஏற முடியலன்னு சொல்லி வீல்சேரில் கூட்டிட்டு போனாம்.
அதை யாரோ வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு கார்த்திக்கு அந்த பிரச்சனை... இந்த பிரச்சனை என்று பரப்பி விட்டுட்டாங்க. அவர் இப்போ நல்லா தான் இருக்கிறார். இப்போதும் அப்பா ரசிகர்களை நேசிக்கிறார், என்று கௌதம் கார்த்திக் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications