அப்பாவை பிளாக்மெயில் செய்து! எங்கள் குடும்பத்தை கலைச்சதே சாவித்திரிதான்! ஜெமினி மகள் கமலா ஆவேசம்
சென்னை: எங்கள் குடும்பத்தை கெடுத்ததே நடிகை சாவித்திரிதான். என் அப்பா 15 ஆண்டுகளாக என் வீட்டிற்கே வராத அளவுக்கு அவரை பிளாக் மெயில் பண்ணிட்டாங்க என மறைந்த "காதல் மன்னன்" ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா கொந்தளித்து பேசியுள்ளார். மேலும் சாவித்திரியை ஒருமையிலும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சாவித்திரி ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். இவர் தனது 47 வயதில் காலமானார். இவர் 1950களில் பிரபலமாக இருந்தார். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருந்தார். "தெலுங்கு சினிமாவின் ராணி" என்று அழைக்கப்பட்டார்.

நடிகர் திலகம் சிவாஜியை போல் சாவித்திரிக்கும் நடிப்பாற்றல் இருப்பதால் அவரை நடிகையர் திலகம் என்றே ரசிகர்கள் அழைத்தனர். இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஜிஜி கருத்தரிப்பு மையம் என்பதை நடத்தி வருபவர் டாக்டர் கமலா. இவர் வேறு யாருமில்லை, ஜெமினி கணேசனின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அது போல் ஜெமினி கணேசன் தன்னுடன் நடித்த சாவித்திரியை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததுதான்.
சாவித்திரி மரணம் ஏன்?
ஆனால் சாவித்திரி குடிக்கு அடிமையாக ஜெமினிதான் காரணம் என்றும் ஜெமினி கணேசன் தனது குடும்பத்தை பிரிய சாவித்திரிதான் காரணம் என்றும் இருவிதமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
சாவித்திரிக்கு தாலி கட்டிய ஜெமினி
இந்த நிலையில் சாவித்திரி- ஜெமினி கணேசன் விவகாரம் குறித்து ஜெமினியின் மூத்த மகள் கமலா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சாவித்திரி ஒரு ராத்திரி கொட்டும் மழையில் எங்கள் வீட்டிற்கு வந்தார்.
கார் ஓட்ட சொல்லி தந்தார்
அப்போது அவர் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக தாலி கட்டி எங்கள் அப்பா ஒரு அந்தஸ்து கொடுத்தார். அவருக்கு தமிழே பேசத் தெரியாது. கையெழுத்து போட தெரியாது. இதையெல்லாம் என் அப்பாதான் கற்றுக் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேல் கார் ஓட்டவும் சொல்லிக் கொடுத்து சாவித்திரியை கவுரவமாக வாழ வைத்தார்.
15 ஆண்டுகள் வீட்டுக்கு செல்லாத ஜெமினி
ஆனால் சாவித்திரியோ அப்பாவுக்கு கல்யாணம் ஆகி இரு பசங்க இருக்காங்கன்னு தெரிஞ்சும் அப்பாவை காதலித்து அவரை பிளாக்மெயில் செய்து 15 ஆண்டுகளாக எங்கள் வீட்டுக்கே வரவிடாம செய்துட்டாங்க. எங்கள் குடும்பத்தையே கலைத்தவர் சாவித்திரிதான். இவ்வாறு ஜெமினி கணேசனின் மகள் கமலா கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.
ஜெமினி சாவித்திரி சந்திப்பு
சாவித்திரி 1948 ஆம் ஆண்டு ஜெமினி கணேசனை முதல் முறையாக சந்தித்தார். பிறகு 1952 ஆம் ஆண்டு அவரை மணந்தார். ஜெமினிக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மகள்கள் (புஷ்பவல்லியுடன் இருவர். கமலாவின் தாய் மூலம் இருவர்) உள்ளனர். மேலும் புஷ்பவல்லியுடன் ஒரு உறவில் ஜெமினி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
மாயாபஜார்
1957 ஆம் ஆண்டு மாயாபஜார் படத்தில் சாவித்திரியின் நடிப்பு பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகும் ஏராளமான படங்களில் சாவித்திரி நடித்து வந்தார். ஜெமினி- சாவித்திரிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர் விஜய சாமுண்டேஸ்வரி, சதீஷ்குமார் கணேசன் ஆகியோராவர். தனது நடிப்பால் சினிமாவில் கொட்டி கட்டி பறந்த சாவித்திரி 19 மாதங்கள் கோமாவில் இருந்து தனது 47ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவருக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தது தெரியவந்தது. மேலும் சாவித்திரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சாவித்திரி குறித்து ஜெமினியின் மூத்த மகள் கமலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications