திருட்டு நகையில் ஊருக்கே பரிசு! இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு சிக்கிய நடிகர்! போலீஸ் செய்த தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் சிலர் சிரித்து பேசி, மற்றவர்களுக்கு உதவி செய்து, ஊர் மக்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்களை காட்டும் போது அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உருவாக்கி விடுகிறது. ஆனால் கேமராவிற்கு முன்னால் தெரியும் முகம் சிலருக்கு நிஜ வாழ்க்கையில் இல்லை என்பதற்கு இப்போது ஒரு சம்பவம் உதாரணமாக மாறி இருக்கிறது. அப்படித்தான் திண்டுக்கல்லை சார்ந்த இன்ஸ்டா பிரபலமும், நடிகருமான பாலமுருகனை காவல்துறை கைது செய்து இருக்கின்றனர்.

ஒரு சில படங்களிலும் ஷார்ட் பிலிம் களிலும் நடித்த நடிகர் பாலமுருகன் ரயிலில் பயணம் செய்த மூதாட்டியிடம் இருந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தை வைத்து தீபாவளியை கொண்டாடியதுடன், ஊர் மக்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கியது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஒரு பக்கம் ஊர் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பரிசுகள் கொடுத்து கொண்டாட்டம், இன்னொரு பக்கம் திருமணத்துக்காக பல வருஷங்களாக சேமித்து வைத்த நகைகளை இழந்து ஒரு குடும்பம் தவித்துக் கொண்டிருந்திருக்கிறது.

Instagram influencer arrested

மூதாட்டியிடம் நகை கொள்ளை

அதாவது கேரள மாநிலம் சங்கனூரை சேர்ந்த 66 வயதான குமாரி என்ற மூதாட்டி சென்னையில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு ரயிலில் சொந்த ஊருக்கு கிளம்பி இருக்கிறார். வீட்டில் பேத்தியின் திருமண விசேஷம் நடைபெற இருப்பதால் அதற்காக சுமார் 50 பவுன் வரையிலான தங்க நகைகளை பையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கடந்த நவம்பர் 2ம் தேதி ட்ரெயினில் போகும்போது மூதாட்டி அசந்து தூக்கி இருக்கிறார். அந்த நேரத்தை பயன்படுத்தி அவரது பையில் இருந்த நகைகளை ஒருவர் திருடி இருக்கிறார்.

ரயில் திருச்சூர் பகுதியை அடைந்தபோதுதான் நகைகள் காணாமல் போனதே அந்த மூதாட்டிக்கு தெரியவந்திருக்கிறது. உடனே அவர் புகார் கொடுத்து இருக்கிறார். ரயில்வே போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். திருட்டியில் ஈடுபட்ட நபர் போலீசிடம் சிக்காமல் இருக்க பல முயற்சிகளை செய்திருக்கிறார். மாஸ்க் அணிந்து கொள்வது, வழியில் உடைகளை மாற்றுவது, பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்வது என தனது அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாதபடி தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.

Instagram influencer arrested

சிசிடிவி காட்சிகள்

இதனால் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்த 600க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர். ஆரம்பத்தில் மாஸ்க் போட்டு இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்திருக்கிறது. ஆனால் கடைசியில் அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ போலீசாருக்கு முக்கியமான தடயமாக அமைந்திருக்கிறது. அந்த தடயங்களை வைத்து விசாரணையை தொடர்ந்த போலீசார் திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகனை அடையாளம் கண்டுள்ளனர்.

போலீஸிடம் சிக்கிய நடிகர்

கோவையில் திருடிய நகைகளை விற்பனை செய்ய முயன்ற போது கேரளா ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து அவரை கைது செய்திரக்கின்றனர். திருடப்பட்ட நகைகளில் 36.42 பவுன் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகனுக்கு 38 வயது ஆகிறதாம். குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறாராம். வீடியோ எடிட்டராக பணியாற்றி இருக்கிறாராம். இவர் மீது ஏற்கனவே ஓடும் ரயிலில் மதுரையில் லேப்டாப்பை திருடியதாக வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு வேறு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+