Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

GOAT டிக்கெட் கிடைக்கலையா? ஓடிடியில் வெங்கட் பிரபுவின் இத்தனை படங்கள் இருக்கு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் நிலையில் அவர் இயக்கி ஓடிடி தளத்தில் இருக்கும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வெங்கட் பிரபு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். இவருடைய திரைப்படங்கள் அதிகமாக காமெடி மற்றும் காதல் செண்டிமெண்ட் எல்லாம் கலந்து இருக்கிறது. அதனாலேயே இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் கான்செப்டை வைத்து பல படங்களை தொடர்ந்து இயக்கி வரும் வெங்கட் பிரபு புதிது புதிதாக பல படங்கள் இயக்கி இருந்தாலும் அவர் இயக்கி வெளியான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இப்போது ஓடிடி தளத்தில் இருக்கிறது.

லைவ் டெலிகாஸ்ட்: நடிகை காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி, பிரியங்கா நாயர், டேனியல் ஆனி போப் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த ஹாரர் திர்லர் பாணியில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் வெப் சீரிஸ் தான் லைவ் டெலிகாஸ்ட். இந்த சீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. 2005 இல் எழுதப்பட்ட டைரி ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களை வைத்து நடக்கும் அமானுஷ்யம் கலந்த விஷயங்கள்தான் இந்த சீரிஸின் கதையாக அமைந்தது.

television goat vijay venkat prabhu

விக்டிம்: ஒரே கதையை மையமாகக் கொண்டு நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்டு ஆந்தாலஜி திரில்லர் சீரியஸாக விக்டீம்- ஜூ எஸ் நெக்ஸ்ட் நான்கு சிறுகதையை கொண்டு சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் கன்ஃபெக்சன் என்ற பகுதியை வெங்கட் பிரபு இயக்கி இருப்பார். இதில் அமலாபால், பிரசன்னா, கிரிஷ், அஞ்சனா, ப்ரீத்தி போன்ற பல நடிகர்கள் நடித்திருப்பார்கள்.

goat vijay venkat prabhu

மன்மத லீலை: அடல்ட் ஒன்லி பிளாக் காமெடி தில்லர் பாணியில் உருவாகிய மன்மத லீலை படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெட்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியானது. வெங்கட் பிரபுவின் மற்ற படங்களைப் போல இந்த படம் இல்லாமல் இந்த படத்தில் அதிகமான லிப்லாக், படுக்கையறை காட்சி கொஞ்சம் தூக்கலாக இடம் பிடித்திருந்தன.

goat vijay venkat prabhu

மங்காத்தா: நடிகர் அஜித்குமாரின் 50வது படமான மங்காத்தா திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஆக்சன், திரில்லர், காதல், துரோகம் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். இதில் திரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, அஞ்சலி என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.

goat vijay venkat prabhu

மாநாடு: நடிகர் சிம்புவுக்கு கம்பேக் கொடுத்த படம் என்றால் அது மாநாடு திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருப்பார். அதிலும் "வந்தான்... சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு" என்ற வசனம் பெரிய அளவில் பிரபலமானது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கியிருந்தார். இது சோனி லைவ் ஓடிடி தளத்தில் உள்ளது.

goat vijay venkat prabhu

பிரியாணி: மங்காத்தா திரைப்பட வெற்றிக்கு பிறகு கார்த்தியை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் பிரியாணி. இந்த திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து நூறாவது படமாக இது அமைந்தது. இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

goat vijay venkat prabhu

மாசு என்கிற மாசிலாமணி: நடிகர் சூர்யா, நயன்தாரா நடித்த ஹாரர் திரில்லர் படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் கலவையான விமர்சனம் பெற்றிருந்தது. இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட், ஆப்பிள் டிவி, அமேசான் பிரைம் ஆகிய ஓடிடி தளத்தில் உள்ளது.

goat vijay venkat prabhu
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+