அலைகள் ஓய்வதில்லை படத்தில் இதுதான் முதல் சீன்.. சொல்லும்போதே மனம் உருகிய நடிகை ராதா! சபாஷ் பாரதிராஜா
சென்னை: பிரபல நடிகை ராதா, தன்னுடைய 61வது பிறந்த நாளை, 2 நாட்களுக்கு முன்பு கொண்டாடினார்.. இதுகுறித்த போட்டோக்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அத்துடன், 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடித்தபோது நடந்த நிகழ்ந்த சில சுவாரஸ்யமான அனுபவங்கள் குறித்து, நாளிதழ் ஒன்றுக்கு ராதா பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியும் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் தனக்கு பிடித்த காட்சியையும் நினைவுகூர்ந்துள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை என்ற தன்னுடைய முதல் படத்திலேயே தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ராதா.. முதல் படமே அவருக்கு பெரிய வரவேற்பை தந்திருந்தது..

பெரிய ஹீரோயின்
இதற்கு பிறகு, கமல், ரஜினி, என சூப்பர் ஹீரோக்களுடன் அடுத்தடுத்த படங்களிலேயே நடித்து, உச்ச நடிகையானார்.. 60 வயதான கேரக்டரில் நடித்த சிவாஜிக்கு ஜோடியாக முதல் மரியாதை படத்தில் நடித்து, அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார்.
வைதேகி காத்திருந்தாள், பாயும் புலி, அம்மன் கோவில் கிழக்காலே, கோபுரங்கள் சாய்வதில்லை, அண்ணா நகர் முதல் தெரு, மெல்ல திறந்தது கதவு, இதய கோவில், ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியானார்.
ராஜசேகர் என்பவரை திருமணம் செய்துள்ள ராதாவிற்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார்... தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி பிசினஸ்களை கவனித்து வருகிறார். கடந்த 3ம் தேதி நடிகை ராதா தன்னுடைய 61வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.. அந்த வீடியோவை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.
அலைகள் ஓய்வதில்லை
சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு ராதா பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் பகிர்ந்திருந்த சுவாரஸ்ய சம்பவங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
ராதா சொல்லும்போது, முதன்முதலில் என்னை நேரில் பார்த்த பாரதிராஜா சார், என்கிட்ட சில கேள்விகளை கேட்டார்.. நானும், மலையாளம், இங்கிலிஷ், அரைகுறையான தமிழ் என்று 3 மொழியையும் சேர்த்து பதில் சொன்னேன்... ஆனாலும் பாரதிராஜா சார் என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணிட்டாரு.
நிறைய ஷூட்டிங்
நான் 9வதுதான் படிச்சிட்டு இருந்தேன்.. நிறைய ஷூட்டிங்கை நேரில் பார்த்திருக்கிறேன் என்றாலும், நானே நடிப்பதால், பயம் இருக்கவே செய்தது.. அதிலும் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது பாஷைதான்.. தமிழும் சரியாக எனக்கு அப்போது தெரியாது. ஆனால், யாராவது பேசினால் புரிந்து கொள்வேன்.
மொழி பிரச்சனை இருந்தாலும், நான் தைரியமாக நடிக்க காரணம், காட்சிக்கு என்ன தேவையோ, அதை பாரதிராஜா சாரே நடித்து காட்டிவிடுவார்..அவர் நடிப்பதை பார்த்து அப்படியே, நடித்து காட்டிவிடுவேன். அதனாலேயே ஒவ்வொரு சீனிலேயும் சார் என்ன செய்ய போகிறார்? எப்படி நடித்து காட்ட போகிறார் என்பதை உற்று கவனிப்பேன்.
முதல் காட்சி மறக்க முடியாது
நான் நடித்த முதல் காட்சி என்னால மறக்க முடியாதது.. ஒரு பாறையில் நான் உட்கார்ந்திருப்பேன்.. அப்போது அங்கு வரும் விச்சுவிடம், 'ஏன் லேட்டு?' என்று கேட்பேன்.. 'கொஞ்சம் நேரமாயிருச்சு'ன்னு கார்த்திக் சொல்லுவார்.
'ஏன் நேரமாயிருச்சு' என்று நான் கேட்பேன். 'கொஞ்சம் லேட்டாயிருச்சு'ன்னு கார்த்திக் சொல்லுவார். 'அதான் ஏன் லேட்டாயிருச்சுன்னு கேட்டேன்'ன்னு மறுபடியும் சொல்லுவேன்...
'3-லேயிருந்து மூன்றரை வரைக்கும் அந்த பாறை, அப்புறம் இந்தப் பாறை, அதுக்குப்புறம் இந்தப் பாறைல உக்கார்ந்திருந்தேன்'ன்னு சொல்லுவேன். இதுதான் என் முதல் காட்சி..
பிடித்தமான காட்சி
அதேபோல, அண்ணி சில்க் ஸ்மிதா எனக்கு அட்வைஸ் பண்ணும் காட்சியும் பிடிக்கும்.. "உங்க கழுத்துல எவ்ளோ நகை இருக்குன்னுதான் எங்க அண்ணன் பாத்துருப்பாரு. எங்க அண்ணன் உங்களுக்கு எவ்ளோ நகை போடுவாருன்னுதான் நீங்க பாத்துருப்பீங்க. அது கல்யாணம். இது காதல்.
என் மனசுல என்ன இருக்குன்னு அவன் பாத்தான். அவன் மனசுல என்ன இருக்குன்னு நான் பாத்தேன். பணத்தைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களுக்கு, மனசைப் பாத்து காதலிக்கிறவங்களைப் பாத்தா, பைத்தியமாத்தான் இருக்கும்' என்று அந்த வசனம் இருக்கும்.
இந்த காட்சி எனக்கு பிடித்தமான காட்சி.. இதுக்கெல்லாம் பாரதிராஜா சாருக்குதான் நன்றி சொல்லணும்" என்று நெகிழ்ந்து கூறியிருந்தார் ராதா.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications