சிறகடிக்க ஆசையில் ரோகிணிக்கு அவ்வளவு பிரச்சனை! ஆனால் மீனா எடுத்த புதிய அவதாரம்.. செம முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகமாக லைக்குகள் பெற்று வருகிறது.

விஜய் டிவியில் டிஆர்பியில் டாப் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

siragadikka aasai serial vijay tv

ரோகிணி எப்போது குடும்பத்திடம் மாட்டுவார் என்றுதான் ஒவ்வொரு ப்ரோமோவுக்கு கீழேயும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ரோகிணி மட்டும் ஆரம்பத்தில் இருந்தே தப்பு மேல் தப்பு செய்து கொண்டிருக்கிறார் ஆனால் அவருக்கு மட்டும் எந்த பிரச்சனையும் வராமல் தப்பித்து விடுகிறாரே என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இப்போது மகிழ்ச்சியான காட்சிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் முழுக்க ரோகிணி குடும்பத்திடம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார். மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் மூன்று கோடிக்கு வீடு வாங்க போகிறோம் என்று 30 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தனர். ஆனால் அந்த நபர் அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றி ஓடிப்போய்விட்டார்‌ அதுபோல வீடு இன்னொருவருடைய வீடு என்ற உண்மையும் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

siragadikka aasai serial vijay tv

அதேநேரத்தில் ரோகிணியும் மனோஜும் சேர்ந்து ஜீவாவிடமிருந்து 30 லட்சம் வாங்கிய விஷயமும் முத்து மூலமாக குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் விஜயா ரோகிணியை அடித்து தன்னுடைய கோபத்தை காட்டி இருக்கிறார். அதோடு மனோஜ் இடமும் ரோகிணியை பேசவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா வெளியிட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. கோமதி பிரியா ஏற்கனவே விஜய் டிவியில் சின்ன சின்ன கேரக்டரில் சீரியலில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.

siragadikka aasai serial vijay tv

இந்த சீரியல் மூலமாக மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் தான் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை ரசிக்க வைக்கும். சீரியலில் தான் எப்போதும் அழுது கொண்டும், அமைதியும் சொரூபமாகவும், தியாக சுடராகவும் நடிக்கும் இவர் ஷூட்டிங்கில் செய்யும் ரகளை பார்ப்பவரை சிரிக்க வைத்து விடும்.

siragadikka aasai serial vijay tv

அதுபோல இப்போது வீட்டில் அவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் மொட்டை மாடியில் ஜாலியாக போட்டோ சூட் எடுத்திருக்கிறார். அதுவும் ஒரு சின்ன பில்லரில் அமர்ந்து அந்தரத்தில் பறப்பது போன்று இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமான லைக் வாங்கி வருகிறது.

தமிழ் சீரியல்களில் அதிகமான மலையாள மற்றும் பிற மொழி நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மதுரையை சார்ந்த கோமதி பிரியா கலக்கி கொண்டு இருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் முக அழகு பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது.

siragadikka aasai serial vijay tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+