குட் நைட் பட இயக்குனரின் கல்யாணம்.. தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்.. விஷயமே இதுதானா?
சென்னை: குட் நைட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விநாயக் சந்திரசேகரனின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் மாப்பிள்ளைக்கு தங்க செயின் பரிசளித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதோடு இயக்குனர் விநாயக் திருமணத்திற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த வருடத்தில் வெளியான குட்நைட் திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. நடிகர் மணிகண்டன் நடிப்பில் இயல்பான கதையை கொண்ட குட் நைட் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் விநாயகர் சந்திரசேகரனும் திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் பேசப்பட்டார்.

ஒரு இளைஞனின் குறட்டை சத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய இந்த திரைப்படம் பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டது. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மீரா ரகுநாத் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு மீரா ரகுராத் திடீரென்று திருமணத்தை முடித்து இருந்தார்.
அவருடைய திருமண புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் குட் நைட் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக மாறி இருந்தனர். இந்த மாதிரி ஒரு பொண்ணு தான் நமக்கு வேணும் என்று பலர் எதிர்பார்த்து இருந்த நிலையில் மீராவின் திருமண புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை சுக்கு நூறாக உடைத்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமணத்தில் குட் நைட் திரைப்படத்தின் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களோடு நடிகர் சிவகார்த்திகேயன் சப்ரைசாக இந்த திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தங்க சங்கிலி ஒன்றை மாப்பிள்ளைக்கு பரிசளித்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்தில் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் தங்க சங்கிலி கொடுத்திருப்பதால் இவர்கள் இருவருடைய கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்விகளும் எழுந்து வருகிறது. இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதால்தான் தங்கச் சங்கிலி போட்டு இருக்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications