6 கிராம் வளையல் டூ 19 நகை கடை..லலிதா ஜுவல்லரி ஓனர் சாதித்தது எப்படி? நகை வாங்குவதில் இவ்வளவு விஷயமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத் சமீபத்தில் ஒரு வீடியோவில் லலிதா ஜுவல்லரி ஓனரிடம் இன்டர்வியூ எடுத்து இருக்கிறார். அப்போது லலிதா ஜுவல்லரி ஓனர் எப்படி தாங்கள் இவ்வளவு வளர்ச்சி அடைந்தோம் என்பது பற்றி பேசி இருக்கிறார்.
அதில் தாங்கள் தங்களுடைய நகைக்கடையை தொடங்கும் போது 6 கிராம் வளையலை விற்று நகைக்கடையை தொடங்கியிருந்தோம். ஆனால் இப்போது 19 கடை இருக்கிறது என்று தங்களுடைய ரகசியங்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

இந்த வகையில் தங்கம் என்பது அடிப்படை அவசியமாக மாறிக்கொண்டிருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. அதே நேரத்தில் அது பெண் பிள்ளைகளின் அழகுக்காகவும் அவர்களின் தேவைக்காகவும் பெற்றோர் தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஒரு ஆறு கிராம் வளையலை வைத்து ஒரு நகைக்கடையை தொடங்கி இப்போது 19 நகை கடைக்கு ஓனராக இருக்கும் கிரண் சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத்தோடு தனியார் சேனலில் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் கிரண் பேசுகையில் நான் சின்ன பையனாக இருக்கும்போது நகை செய்யும் கடைக்கு வேலைக்கு சேர்ந்தேன்.
அங்குள்ள வேலைகளை விரைவாக கற்றுக் கொண்டு அம்மாவிடம் இருந்த நகையை வாங்கி அதில் ஒரு அழகான தோடை செய்தேன். அந்த தோடை சென்னையில் இருக்கும் லலிதா ஜுவல்லரிக்கு விற்பனை செய்த பிறகு அங்கு எனக்கு நகை செய்ய ஆர்டர் கிடைத்தது. மெல்ல மெல்ல பிற கடைகளுக்கு நகைகளை செய்து மொத்தமாக கொடுத்து வந்தோம். அந்த நேரத்தில் கையில் கொஞ்சம் காசு வர ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கந்தசாமி கோல் என்னை ஒருமுறை அழைத்தார். அவருக்கு நிறைய கடன் இருப்பதாகவும் இந்த கடையை எப்படி அடுத்து நடத்திக் கொண்டு போவது என்று தனக்கு தெரியவில்லை என்று தன்னுடைய சிக்கல்களை சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் எனக்கு இந்த கடையை விட்டு விடக்கூடாது என்று தோன்றியது. அதனால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து அந்த கடையை வாங்கி இருந்தேன்.
அதுதான் நான் வாங்கிய முதல் கடை அந்த கடையில் ஆரம்பத்தில் நான் மொத்த நகைகளை செய்து கொண்டிருந்த நிலையில் பிறகு நகைகளை நாமே விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தேன். மொத்த நகைகளை ஒவ்வொரு கடைகளுக்கும் கொடுக்கும் போது அதில் பல்வேறு பிரச்சனைகள் வராதான் செய்தது. சிலர் உடனே பணத்தை தர மாட்டார்கள். ஒரு சில நாட்கள் கழித்து தருவார்கள்.
அந்த ஒரு சில நாட்களில் நகையின் விலை எப்படியும் ஏறிவிடும். அது அவர்களுக்கு லாபம் தான் ஆனால் அந்த பணத்தை வாங்குவதற்குள் எங்களுக்கு படாதபாடு ஆகிவிடும். தங்கத்தை வாங்கி பொருளை செய்து அதை இன்னொருத்தருக்கு கொடுத்து அவர்கள் பணம் தரும் வரைக்கும் நாம் காத்திருப்பதை விட அந்த தங்க நகைகளை நாமே விற்பனை செய்யலாம் என்று தோன்றியது.
அதனாலையே எங்களுடைய கடையில் விற்பனையை தொடங்கி இருந்தோம். அது எங்களுக்கு வருமானத்தை தர தொடங்கியது .அதற்கு பிறகு அடுத்தடுத்து நகைக்கடை திறந்து அதில் நாங்கள் விற்பனை செய்தோம். இதனால் பலரோடு பிரச்சனையும் வர ஆரம்பித்தது. நீங்கள் எப்படி விற்பனை செய்து விடுகிறீர்கள் பார்ப்போம் என்று எங்களிடம் நேரடியாகவே கூட சிலர் சொல்லி இருந்தார்கள்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி தான் நாங்கள் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்தேன். ஆரம்பத்தில் நான் லலிதா ஜுவல்லரி வாங்கியதும் எனக்கு ஆர்டர் தந்த மற்ற கடைகள் எல்லாரும் நிறுத்திவிட்டார்கள். அதனால் நான் பிற நக கடைகளுக்கு கொடுப்பது போன்று மொத்த விலையில் தான் என்னுடைய நகைக்கடையில் பொருட்களை விற்பனை செய்கிறேன்.
அதனால் தான் எங்கள் கடைக்கு அதிகமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இப்போதும் விளம்பரங்களில் கூட எங்களிடம் நகை வாங்க வேண்டும் என்று யாரிடமும் சொல்வது கிடையாது. வேறு கடைகளில் நகை விலையை கேட்டு வந்து எங்கள் விலையை கேளுங்கள் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன் என்று கிரண் பேசிக் கொண்டிருக்கையில்,
இடைமறித்த கோபிநாத் எனக்கு இதுதான் சந்தேகமாக இருக்கிறது நீங்கள் உங்கள் கடையில் ஒரு விலை சொல்கிறீர்கள், மற்றொரு கடையில் ஒரு விலை சொல்கிறார்கள். ஆனால் தங்கத்தின் விலை இதுதான் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது ஆனால் எப்படி கடைக்கு கடை வித்தியாசம் ஆகிறது என்று கேட்கிறார். அதற்கு கிரண் அது ஒவ்வொரு கடையிலும் செய்கூலி சேதாரம் என்று மாறுபட்ட அளவு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தங்கத்தின் விலை ஒரே அளவில்தான் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. என் கடையில் தங்கத்தின் விலை 6000 என்றால் எல்லா கடையிலும் அதுபோலத்தான் இருக்கும். ஆனால் செய்கூலி செய்தாராம் அவர்களுடைய பொருளின் தரத்திற்கு ஏற்ப மாறுகிறது என்று கிரண் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபிநாத் தங்கத்தின் விலை இனி குறைவதற்கு வாய்ப்பே இல்லையா சார்?
ஒவ்வொரு நாளும் விலை ஏறிக்கொண்டே போகிறது என்று சொல்ல அதற்கு கிரண் ஆமாம் எல்லோரும் தங்கத்தை தேடுவதால் தங்கத்தின் விலை கூட தான் செய்யும். இன்னும் கொஞ்ச நாளில் பத்தாயிரம் ரூபாய் வந்துவிடும் என்று பயம் காட்ட அதற்கு கோபிநாத் இப்படியே போனால் எங்க நிலைமை என்னவென்று தெரியவில்லையே என்று மக்களைப் போலவே புலம்பி கொண்டிருக்கிறார்.
அதோடு கோபிநாத் ஒரு எடுத்துக்காட்டும் சொன்னார். அதாவது என்னுடைய நண்பரோ அல்லது உறவினரோ என்னுடைய கல்யாணத்துக்கு ஒரு கிராம் அல்லது ஒரு பவுனுக்கு மோதிரம் போட்டு இருப்பார். ஆனால் அவருக்கு ஒரு பத்து வருடம் கழித்து செய்யும்போது இங்கே விலை எக்கு தப்பாக ஏறிவிடுகிறது. இதற்கு நாங்கள் என்ன பண்ண என்று கேட்க அதற்கு கிரண் இதற்கு ஒன்னும் பண்ண முடியாது என்று சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications