கவுண்டமணியின் மனைவி நடிகையா? அதுவிடுங்க, கவுண்டமணி "கவுண்டரே" கிடையாது.. இதென்ன புதுஸா? பிரபலம் நச்
சென்னை: கவுண்டமணி மனைவி சாந்தி மிகவும் கடவுள் பக்தி உடையவர்.. 67 வயதாகிவிட்டது.. அவர் வெளியே வந்ததே கிடையாது.. அவர் எப்படி இறந்தார்? என்று தெரியாது. ஒருவர் இறந்ததும் அவரை பற்றி பேசுவது நாகரீகம் கிடையாது. பொதுவாக யாராக இருந்தாலும், மனைவி இறந்துவிட்டாலே, அவர் பாதி மனிதராகிவிடுவார் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், கவுண்டமணி பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், கவுண்டமனியின் மனைவி, குழந்தைகளை யாருமே பார்த்திருக்க முடியாது.. மூத்த மகள் சுமித்ராவை பற்றி தெரிந்திருக்கும். அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு மாதந்தோறும், அங்குள்ள நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்..

மனைவி சாந்தி
ஆனால், ஆரம்ப காலத்திலிருந்தே தன்னுடைய குடும்பத்தை பற்றிய எந்த தகவலையும் போட்டோவையும் கவுண்டமணி வெளியிட்டதில்லை.. அப்படியே பத்திரிகையாளர்கள் அவரது குடும்பத்தை பற்றி கேட்டாலும், "என் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்வதில் உனக்கென்னய்யா அவ்வளவு ஆர்வம்? கவுண்டமணி என்பவன் நடிகன், காசு வாங்குறான், நடிக்கிறான், அதனால என்னை பற்றி எழுதுங்கள், அது உங்கள் உரிமை, என் குடும்பம் உனக்கெதுக்கு என்பார் கவுண்டமணி.
எந்த விழாக்களுக்கு சென்றாலும், தனியாகத்தான் வந்து செல்வாரே தவிர குடும்பத்தை அழைத்து கொண்டு வர மாட்டார்.. கோயில்களுக்கும் செல்ல மாட்டார்.. மனைவியின் வற்புறுத்தலால் சில கோயில்களுக்கு மட்டுமே சென்றுள்ளார். அதேபோல பிறந்தநாள் விழா கொண்டாட மாட்டார். மற்றவர்கள் பிறந்தநாள் கொண்டாடினாலும் கிண்டல் செய்வார்.
பிறந்த நாள் வரும் மாதமே
யாரையுமே அவர், இவர் , அவங்க, இவங்க என்று மரியாதையுடன் சொல்ல மாட்டார். எல்லாரையுமே அவன், இவன் என்றுதான் பேசுவார்.. எல்லாருக்கும் வயது மூத்தவர், அதாவது இந்த மாதம் 25ம் தேதி கவுண்டமணிக்கு 86 வயதாகிறது.. பிறந்தநாள் வரும் மாதமே அவரது மனைவி சாந்தி இறந்துள்ளார்.. கவுண்டமணி மனைவி சாந்தி, அந்த காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டிருந்தவர். சில சினிமாக்களில் துணை நடிகையாகவும் நடித்திருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
குண்டு கருப்பையா உடம்பெல்லாம் பெயின்ட் அடித்து கொண்டு நடித்ததில், 10வது நாளே உடம்பில் விஷம் தாக்கி இறந்துவிட்டார்.. அவர் கவுண்டமணிக்கு சீனியர் என்பதால் பல்வேறு தகவல்களை எனக்கு சொல்வார். ஒருமுறை கவுண்டமணி பற்றி நான் அவரிடம் கேட்டதற்கு, அவர் கவுண்டர் என்பது உனக்கு தெரியுமா? அவர் கவுண்டரே கிடையாது. அந்த கால நாடகங்களில் கவுண்ட்டர் தந்து நடிப்பார். அதுதான் கவுண்டமணி என்றாயிற்று என்று விளக்கம் தந்தார். இதை பாக்யராஜ் சாரும் பலமுறை சொல்லி உள்ளார்.
கவுண்டமணி கவுண்ட்டர்
16 வயதினிலே படத்தில் யாரிந்த கவுண்டமணி? என்று பலரும் கவனித்தனர். ஆனால், அவன் இவன் என்று பாக்யராஜை கவுண்டமணி கூப்பிட்டது யாருக்கும் பிடிக்கவில்லை, இதை அவரிடம் சொன்னதால், சில காலம் பாக்யராஜின் படங்களில் நடிக்கவில்லை.
அதேபோல ரஜினியையும் அவன், இவன் என்றுதான் கவுண்டமணி பேசுவார்.. டைரக்டர் பி.வாசு இதுகுறித்து கேட்டிருக்கிறார்.. வயசில் சின்னவன்தானே? என்று கவுண்டமணி கேட்டாராம். இதை யதேச்சையாக கேட்ட ரஜினியும், கவுண்டமணி பேசுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பி.வாசுவிடம் சொல்லிவிட்டார்.. அந்த அளவுக்கு ரஜினிகாந்த் பெருந்தன்மை மிக்கவர்.. ஆனால், கமல்ஹாசன் அப்படி கிடையாது.. அஜித்குமாரும் அப்படி கிடையாது.
கார் பிரியர் கவுண்டமணி
கவுண்டமணி மனைவி சாந்தி மிகவும் கடவுள் பக்தி உடையவர்.. 67 வயதாகிவிட்டது.. அவர் வெளியே வந்ததே கிடையாது.. அவர் எப்படி இறந்தார்? என்று தெரியாது. ஒருவர் இறந்ததும் அவரை பற்றி பேசுவது நாகரீகம் கிடையாது. பொதுவாக யாராக இருந்தாலும், மனைவி இறந்துவிட்டாலே, அவர் பாதி மனிதராகிவிடுவார்..
கவுண்டமணி நீண்ட காலமாகவே எல்டாம்ஸ் ரோட்டில் வீடுகளை வாங்கி வைத்துள்ளார்.. கார் மீது அதிக பிரியம் கொண்டவர் கவுண்டமணி.. கிட்டத்தட்ட 9 கார்களை வைத்திருக்கிறார் கவுண்டமணி. தனக்கு மிகவும் நெருக்கமான நபர்களாக இருந்தால் மட்டுமே அவர்களது வீட்டு நல்லது, கெட்டதுகளில் கவுண்டமணி பங்கேற்பார்.. பெரும்பாலான விழாக்களை தவிர்த்துவிடுவார் கவுண்டமணி.. இவர் மற்றவர்கள் வீட்டுக்கு சென்றால்தானே, இவர் வீட்டுக்கு ஆட்கள் வருவார்கள்?
நடிகர் செந்தில் மகன் பல் டாக்டர்.. இன்னொருவர் நடிக்க முயற்சித்தார்.. ஆனால், அவருக்கு நடிப்பு வரல.. பிறகு டப்பிங் செய்ய முயற்சித்தார்.. அதையும் விட்டுவிட்டு விலகிவிட்டார்.. ஆனால், கவுண்டமணிக்கு 2 பெண்கள் மட்டுமே.. ஒருவர் பெயர் சுமித்ரா-. மற்றொருவர் பெயர் செல்வி.. இதில் முதல் திருமணததை அனைவரும் பார்க்கும்படியாக நடத்தி வைத்தார்..
சாதி பார்த்ததில்லை - ரசிகர் மன்றம் இல்லை
கவுண்டமணி, சாந்தி இவர்கள் என்ன ஜாதி என்று யாருக்குமே தெரியாது. சாதி பார்க்காமல் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.. இன்னொரு மகளுக்கு, டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார்தான், மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்தார்.. இதனால் அந்த திருமணத்தில் கேஎஸ் ரவிக்குமாரின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
தன்னை பார்க்க ரசிகர்கள் வந்திருப்பதாக சொன்னாலும், "ஏன் என்னை பார்க்கணும்? படத்தில் என்னை பார்த்தால் போதாதா? எனக்கு எந்த ரசிகர் மன்றமும் தேவையில்லை என்பார்.. ரசிகர் மன்றம் வைத்திருக்காத ஒரே நடிகர் தான் தான் என்று கெத்தாக சொல்வார் கவுண்டமணி..
ஒருமுறை பொள்ளாச்சியில் கவுண்டமணி ஷூட்டிங்கில் இருந்தபோது, "இது உங்கள் சொந்த ஊருதானே?" என்று கேட்டேன். அதற்கு கவுண்டமணி, "இங்கே எனக்கு சொந்த வீடு கூட கிடையாது. என்னுடைய அக்கா இருக்காங்க.. அவங்களுக்கு பணம் அனுப்பி வருகிறேன்.. நானே என்னுடைய சொந்த ஊரை மறந்துவிட்டேன்.. வேண்டுமானாலும், பொள்ளாச்சி என் ஊருனு பத்திரிகைகளில் எழுதிக்கோ" என்றார்..
துணை நடிகர் - வெள்ளந்தி மனிதர்
ஒருமுறை கவுண்டமணியிடம் வந்த ஒருவர், தான் ஒரு அதிமுக எம்எல்ஏ என்று அறிமுகப்படுத்தி கொண்டார். அதற்கு கவுண்டமணி, இருந்துட்டு போ, அந்த தொகுதியில் நான் உனக்கு ஓட்டு போடலயே என்று முகத்துக்கு நேராக சொல்லிவிட்டார்.
கவுண்டமணியின் முதல் படம் சர்வர் சுந்தர்.. அதில் 10-ல் ஒருவராக நடித்திருப்பார். அதேபோல, எங்க வீட்டுப்பிள்ளை படத்தில், நான் ஆணையிட்டால் பாட்டிலும், வருவார்.. அப்போதெல்லாம் துணை நடிகராகவே நடித்து வந்தார்..
தேனாம்பேட்டையில்தான் ஆரம்ப கட்டத்தில் பாக்ரயாஜ், கவுண்டமணி தங்கியிருந்தனர். இவர்களில் சற்று பணக்காரர், சங்கிலி முருகன்தான்.. ஊரில் நாடகங்களை போட்டு அதில் சம்பாதித்து, அந்த பணத்தை இங்கே கொண்டு வருவார்.. இங்கே தங்கியிருக்கும் பாக்யராஜ், கவுண்டமணிக்கெல்லாம் சாப்பாடு வாங்கி தருவார். முருகன் வந்துட்டானா? என்றுதான் கவுண்டமணி கேட்பார்.. சங்கிலி முருகன் என்று பெயரை சொல்ல மாட்டார்.. அதுதான் கவுண்டமணி கெத்து. மிகவும் கௌரவமான ஆள்.. வெள்ளந்தியான நபர்" என்று தெரிவித்துள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications