சாந்திக்காக பங்களாவை கட்டி.. பத்திய சாப்பாடு எடுத்து வந்த கவுண்டமணி.. தாங்கிய அன்பு மனைவி: பிரபலம்
சென்னை: பிரபல காமெடி கிங் கவுண்டமணியின் மனைவி சாந்தி, கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.. அதெல்லாம் தவறான தகவல்.. பண நெருக்கடி என்பது கவுண்டமணி குடும்பத்துக்கு கிடையவே கிடையாது என்கிறார் பத்திரிகையாளர் சபிதா ஜோசப். அத்துடன், கவுண்டமணி குறித்து பரவி வரும் சில தகவல்களுக்கும் விளக்கம் தந்து பேட்டி தந்திருக்கிறார் சபிதா ஜோசப்.
Sakthi Cine News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "காமெடி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் கவுண்டமணி.. ரொம்ப கஷ்டப்பட்டுதான் சினிமாவில் நடிக்க வந்தவர். அவரது இயற்பெயர் சுப்பிரமணி.. நாடகங்களில் கவுண்ட்டர் அடித்துக் கொண்டே பேசியதால், கவுண்டமணி என்று பெயர் வந்தது..

விஐபிகள் குடும்பம்
நாடகங்களில் 25, 30 ரூபாய் மட்டுமே அப்போது சம்பளம் தருவார்கள்.. சாந்தியம்மாவும் அப்போது நாடகங்களில் நடித்து கொண்டிருந்தார். அப்போது சாந்தியம்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு சென்னை தேனாம்பேட்டையில் சாதாரண ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
தான் கஷ்டப்பட்டாலும், குடும்பத்தை கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டார். ஒருகட்டத்தில் சினிமாவில் வளர்ந்தபிறகு மனைவியை மகாராணி போல வைத்திருந்தார்.. மகள்களையும் இளவரசி போல பார்த்துக் கொண்டார்..
தன்னுடைய குடும்பத்தை கவுண்டமணி வெளியே காட்டவில்லை என்பார்கள்.. ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லாதது.. குடும்ப உறுப்பினர்கள் வெளியே வரும்போது கூட்டம் சேரலாம், யாராவது கடத்தி கொண்டும் போகலாம்.. அதனால்தான் பல விஐபிகள் தங்கள் குடும்பத்தினரை வெளியே காட்ட மாட்டார்கள். வெளியில் யாரிடமும் குடும்பத்தினர் பற்றி பேசவும் மாட்டார் கவுண்டமணி. பத்திரிகையாளரக்ளுக்கு பேட்டிகளையும் தர மாட்டார்.
பக்தி, குலதெய்வம்
முன்பெல்லாம் தினமும் வுட்லேண்ட்ஸ் ஓட்டலில் மாலை 4 மணிக்கு தோசை ஏதாவது சாப்பிட்டு போவார்.. ஒருமுறை கவுண்டமணிக்கு மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டது. அப்போது அவரது மனைவி கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார். அதறகு பிறகு ஷூட்டிங் எங்கு நடந்தாலும் பத்திய சாப்பாடு தயாரித்து அனுப்பி வைத்துவிடுவார்.. அப்போது ஜீன்ஸ் படத்தின்போது 40 நாள் கால்ஷூட் கேட்டபோது, உடல்நல குறைபாடு காரணமாக மறுத்துவிட்டார் கவுண்டமணி.
கவுண்டமணி கடவுள் மறுப்பாளர் என்பார்கள்.. அப்படியெல்லாம் கிடையாது. மூடநம்பிக்கைகள் கூடாது என்றுதான் சொல்வார்..அவருக்கும் பக்தி, குலதெய்வம் உண்டு.. அதேபோல, கவுண்டமணிக்கு பண நெருக்கடி இருந்தது, அதனால்தான், சாந்திக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்கிறார்கள்.. அதெல்லாம் தவறான தகவல்.. பண நெருக்கடி என்பது அவருக்கு கிடையவே கிடையாது..
ஆசை ஆசையாக காத்திருந்த கவுண்டமணி
10 படங்கள் ஹீரோவாக நடித்ததுடன், ஒருநாளைக்கு 2 லட்சம் வரை சம்பளம் பெற்றார். அத்தனையையும் மனைவியிடம் கொண்டு போய் தருவார்.. சாந்தியம்மாதான் அனைத்து நிர்வாகத்தையும் கவனித்து கொள்வார்..
கவுண்டமணி சம்பாதித்து பணத்தை மனைவியிடம் தருவதோடு சரி, அதில் தலையிட்டதில்லை.. மனைவி இறப்பதற்கு முன்பு ஒரு பெரிய பங்களா கட்டி வந்தார்... அதில் மனைவியுடன் குடியேறலாம் என்று நினைத்தார். ஆசை ஆசையாக அந்த பங்களா கட்டி முடித்து, குடிபோவதற்குள் சாந்தியம்மா இறந்துவிட்டார்.. மனைவியின் இழப்பிலிருந்து அவர் மீளவில்லை.. நிறையவே கலங்கி போயிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications