ஜிபி முத்துவுக்கு சோதனை மேல் சோதனை.. 9 பிரிவில் வழக்குப்பதிவு.. பின்னணி காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூபர் ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக தவறான தகவல்களை பரப்புவதாகவும், பெண்களை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி வருவதாகவும் குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் பிரபல யூடியூப்பர் ஜி.பி. முத்து வசித்து வருகிறார். சோசியல் மீடியாவில் பிரபலமான ஜிபி முத்துக்கு இப்போ அவருடைய சொந்த ஊரிலேயே பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தன்னையும், தன்னுடைய பிள்ளைகளையும் ஊர் காரர்கள் அடித்து விட்டார்கள் என்று புகார் கொடுத்து இருந்தார். தான் தாக்கப்பட்ட வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார்.

ஜுபிக்கு முத்து பிரச்சனை

ஜி பி முத்துக்கும் அந்தப் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவில் கட்டுவதற்கும் பல வருடங்களாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் ஜிபி முத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரப்படி அப்பகுதி மக்கள் கோவில் கட்டும் பணியை தொடங்கினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் மாந்திரீக வேலை செய்வதாக ஜி பி முத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி பெரும் பேசும் பொருளாக மாறியது.

GP Muthu YouTuber Kulasekarapattinam

ஜி பி முத்து மீது புகார்

இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதி ஊர் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு 2 வேனில் வந்தனர். காவல் நிலையத்தில் ஜிபி முத்து மீது புகார் அளித்தனர். அந்தப் புகாரில் சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக ஜிபி முத்து கோவிலில் நடந்த சிறப்பு பூஜையை மாந்திரீக பூஜை நடப்பதாக வீடியோ வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி அந்த வீடியோவை வைரலாகியதாகவும், மேலும் அந்தப் பகுதியில் உள்ள சில பெண்களைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்டதாகவும் மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் பணிகள் கட்டப்பட்டு வருவதை பொதுப் பாதையில் கட்டப்படுவதாக கூறி தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி வந்ததாகவும், ஜி பி முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் புகார் மனு கொடுக்க வந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+