ஜி பி முத்துக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் அனுமதி... வெளியான தகவல்கள்..?
சென்னை: சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் ஜிபி முத்து திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் பெட்டில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கும் ஜி.பி முத்துவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறதாம்.

தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த ஜிபி முத்து அதற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் பெரும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக் பாக்ஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் ஜி பி முத்து கலந்து கொண்டிருந்தார்.
ஜி பி முத்துவின் லெட்டர் வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜி பி முத்து முன்ன மாதிரி இப்போ லெட்டர் படிக்கவில்லையே என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு அந்த லெட்டர் படிக்கும்போது இவர் செய்யும் எதிர்பாராத காமெடி பலரை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறது.
என்னதான் இவர் பிரபலமாக இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பேப்பர் ஐடிகளும், ட்ரோல் வீடியோக்களும் தான். ஜிபி முத்து செய்யும் சின்ன சின்ன செயல்களையும் வேற லெவல் கலாய்த்து ட்ரண்ட் செய்து விட்டனர். அதனாலேயே பட்டி தொட்டி எல்லாம்... ஏன் குழந்தைகள் கூட விரும்பும் ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாகவும் கலந்து கொண்டு வரும் ஜி பி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், ஆதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே நேற்று சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு பண்டிகையை சிறப்பாக குடும்பத்தோடு கொண்டாடி அந்த வீடியோவை தன்னுடைய youtube பக்கங்களில் ஜி பி முத்து பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலை வேளையில் ஜி.பி முத்து வெளியிட்ட வீடியோ இப்ப வரைக்கும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், இதற்குள் ஜி பி முத்துக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications