பாட்டிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு.. கோவம் வந்திருச்சு காதலரை பிரிச்சுட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் எம்ஜிஆர் லதா வேலுவுக்கு பாட்டியா நடிச்சு இருக்காங்க. வரிசையா அடுத்தடுத்து சீரியல்களில் நடிச்சு இன்னொரு ரவுண்டு என்று சொல்லும் அளவுக்கு வாய்ப்புக்கள் அவங்களைத் தேடி வந்துகிட்டே இருக்கு. விஜய்டிவியில் இரண்டு சீரியல், சன் டிவியில் ஒரு சீரியல் என்று சீரியல் களத்தில் கின்னுன்னு நிக்கறாங்க லதா.

எப்போதும் எம்ஜிஆர் லதா என்று மக்கள் தன்னை அழைப்பதை விரும்புவதாக சொல்லும் லதா, இது எனக்கு பெருமைதான் என்றும் கூறி வருகிறார். விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல், சிவா மனசுல சக்தி ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியின் ரோஜா சீரியலிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் அப்டேட்டில் இருக்க விரும்புவதாகவும், செல்போன், லேப்டாப் என்று இரண்டையும் நன்றாக கையாள்வதாகவும் கூறும் லதா, இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, தனது நடிப்பு பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கார். அதிகமா மீடியா வெளிச்சமும் அவ்வப்போது இவர் மீது பட, அதிமுக அரசியலில் இருக்கிறார்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில், தினமும் தாலைகாட்டும் படியான முக்கிய கதாபாத்திரம் லதாவுக்கு. நன்றாகவே நடித்து வருகிறார் லதா. பேரன் வேலு மீது உயிரையே வைத்து இருக்கும் பாட்டி வேடம். அதே போல பேரனுக்கு தமிழை கல்யாணம் செய்து வைத்து அவளை பேத்தியாக நினைச்சு பாசம் காண்பிக்கும் பாட்டியாக நடிச்சு இருக்கார். தமிழ் உண்மையை மறைச்சுட்டா என்று கோபம் வந்துருச்சு. கோவப்படும் காட்சியில் விடாமல் வசனம் பேசி நடிச்சு சீரியல் ஆர்வலகர்களை கவர்ந்து இருக்கார்.

ரோஜா காமாட்சி

ரோஜா காமாட்சி

ரோஜா சீரியலில் காமாட்சி பாட்டியாக காமெடியும் செய்து இருக்கும் லதாவின் காமெடி உண்மையில் சிரிக்க வைக்குது. நடிகை வடிவுக்கரசியுடன் போட்டி போடும் கதாபாத்திரம். விஜய் டிவி சீரியல்களில் விடாமல் டயலாக் பேசுவதிலாகட்டும், சன் டிவி சீரியலில் காமெடி செய்வதிலாகட்டும் லதாவின் நடிப்பில் தனித்தன்மை தெரிகிறது.

உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்தபோது, மஞ்சுளாவுடன் சேர்ந்துக்கொண்டு யாருக்கு தெரிய போகிறது என்று ஹோட்டல் அறைக்கு ஐஸ்கிரீம் வரவழைச்சு சாப்பிட, என்ன ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சா என்று கேட்டு எம்ஜிஆர் கிண்டல் அடித்தாராம். பில் அவர் பார்வைக்குத்தான் போகும் என்று கூட தெரியாமல் வெள்ளந்தியாக இருந்ததாக கூறுகிறார் லதா.

தமிழ் வேலு

தமிழ் வேலு

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் பொய் பேசி குடும்பத்துக்கு விரோதியாக இருந்தாள் என்று தமிழை ஒதுக்கி வைக்கறாங்க லதா பாட்டி.பேரன் என்று கூட பார்க்காமல் அவர்களது லவ்வை அங்கீகரிக்க முடியாமல், பேரனின் தலையில் தண்ணீரை ஊற்றி இனி உனக்கும் தமிழுக்கும் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை என்று காதல் தம்பதியை பிரிச்சு வச்சுட்டாங்க. பாட்டிக்கும் பேரனுக்குமான உறவை விளங்கச் சொல்வதாக இந்த சீரியல் இருக்கிறது. இதில் லதா நடித்து இருப்பதும் பொருத்தமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+