Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நாகேஷ் பேரன்னு தெரியாமலே பேசறாங்க!" 'காந்தா' படத்தின் மூலம் தனக்கென அடையாளம்‌ தேடும் பிஜேஷ்! உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தற்போது திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் பிரம்மாண்டத் திரைப்படமான 'காந்தா', பல கலைஞர்களுக்குத் திரையுலகில் ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில், தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்தியான மறைந்த நடிகர் நாகேஷிற் பேரன் பிஜேஷ் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும், தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Nagesh Anand Babu

பிஜேஷின் மனம் திறந்த பேச்சு

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பிஜேஷ், தன் தாத்தாவின் ஜாம்பவான் புகழில் இருந்து விடுபட்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கான தனது பயணத்தை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார். "நான் நாகேஷ் பேரன்னு தெரியாம... காந்தா படத்தில என் நடிப்பைப் பார்த்திட்டு 'இவரு நடிக்கிறது நாகேஷ் மாதிரி இருக்கு'னு சொல்லுறாங்க. அந்த நேரத்தில நம்ம நடிப்பைப் பத்தி யாரும் பேசலையேனு கொஞ்சம் வருத்தமா இருக்கும்."

"ஆனா, மக்கள் சொல்லுற வார்த்தைகள் மூலமா என் தாத்தா உயிரோட இருக்கார்னு மகிழ்ச்சியாக இருக்கு" எனக் கூறியுள்ளார். பிஜேஷின் இந்தக் கருத்து, தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய லெகசியின் வாரிசாக இருப்பதன் சவாலையும், பெருமையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறது.

நாகேஷ் எனும் ஜாம்பவான்

பிஜேஷின் தாத்தா, நாகேஷ் (நாகேஸ்வரன்) அவ்வளவு சீக்கிரமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்து விட முடியாது. ஒல்லியான தேகம் துடுதுடுவென நடிப்பு காமெடியா சென்டிமீட்டர் நடனமா எல்லாமே எனக்கு அத்துபிடி என்று அந்த காலத்திலேயே நிரூபித்தவர். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் அவர்களின் நண்பராகவும், அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பவராகவும், குடும்பத்தினராகவும் நடித்து வந்த நாகேஷ் ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து பலருடைய நன்மதிப்பையும் பெற்று வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஒரு அழிக்க முடியாத சின்னம் நாகேஷ் என்னும் கலைஞன். ஒரு நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் எனப் பல பரிமாணங்களில் முத்திரை பதித்தவர். இவரின் உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் நேர்த்தியான நடிப்பு பாணி இன்றும் யாராலும் நெருங்க முடியாத சாதனையாகும்.

நாகேஷ் - ரெஜினா தம்பதியினருக்கு ஆனந்த்பாபு, ரமேஷ் மற்றும் ராஜ்மோகன் என மூன்று மகன்கள். இவர்களில், ஆனந்த்பாபு 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர். இப்போது சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் பிஜேஷ், நாகேஷ் மகன் ஆனந்த்பாபுவின் மகனாவார். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் திரையுலகிற்குள் வந்தவர்.

காந்தாவில் பிஜேஷின் நடிப்பு

தற்போது வசூலில் சாதனை படைத்துவரும் 'காந்தா' திரைப்படமானது, படத்தின் கதை, இரண்டு நடிகர்கள் மற்றும் அவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் பற்றி தான் இந்த படம் பயணிக்கிறது. பிஜேஷ் இப்படத்தில் மிகவும் சிறிய, ஆனால் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் ஆகியவை மறைந்த நடிகர் நாகேஷ் அவர்களின் உடல்மொழியை ஒத்திருந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாகேஷின் நிழல் பிஜேஷின் நடிப்பில் தெரிவதுதான், பலரும் அவரை 'நாகேஷ் மாதிரி நடிக்கிறார்' என்று பாராட்டக் காரணம்.

நாகேஷ் போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் பேரனாக இருப்பது பெருமை என்றாலும், அந்த லெகசியின் நிழலில் இருந்து விலகித் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க வேண்டிய சவாலும் பிஜேஷுக்கு உள்ளது. அவரது தற்போதைய வெற்றி, அவர் தனது திறமையின் மூலம் மெதுவாகத் தமிழ் திரையுலகில் தனது அடியைத் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. தாத்தாவின் நடிப்பின் சாயல் இருந்தாலும், பிஜேஷ் தன்னை ஒரு நடிகராக நிரூபிப்பதில் உறுதியுடன் இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+