நெற்றிக்கண் சூட்டிங்.. ரஜினியை கிண்டல் செய்த கும்பல்.. மூக்கில் ரத்தம்.. குண்டு கல்யாணம் பரபரப்பு
சென்னை: என் மீது கல்லை தூக்கி எறிவாங்க, 10 இட்லி சாம்பார் என கிண்டல் செய்வார்கள் என குண்டு கல்யாணம் அவரது மலரும் நினைவுகள் குறித்து கூறியுள்ளார்.
குண்டு கல்யாணம் 1967 ஆம் ஆண்டு சினிமாவில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். குண்டு கல்யாணம் 1967 ஆம் ஆண்டு சினிமாவில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நடிகர் குண்டு கல்யாணம் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் நடித்துக் கொண்டேதான் சாக வேண்டும், இந்த நடிப்புத் தொழில் என் ரத்தத்தில் ஊறி போனது. சிறிய வயதிலேயே என் தந்தை எனக்கு நடிப்புக் கலையை கற்றுக் கொடுத்தார்.
அதனால் எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. என்னுடன் நிறைய பேர் நடிக்க வந்தார்கள், போனார்கள். ஆனால் இப்போது கூட என்னை பார்ப்போர், இன்னும் ஏன் படத்தில் நடிக்காமல் இருக்கிறீர்கள் என நிறைய பேர் கேட்பார்கள். எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கிடைப்பதற்காக நான் காத்திருக்கிறேன்.
அன்புள்ள அப்பா என்ற படத்தில் நடித்தேன். அதில் சிவாஜி சார் ஹீரோ, நதியா ஹீரோயின், நான் நதியாவின் தோழிகளை எல்லாம் லவ் செய்யும் கேரக்டர். ஒரு கட்டத்தில் அவர்களிடம் 11 பக்க டயலாக்குகளை பேச வேண்டும். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு மாடுலேஷனில் பேச வேண்டும். நான் வரிசையாக பேசி முடித்துவிட்டு கடைசியாக நதியாவிடம் பேசினேன்.
அதன் பிறகு அந்த யூனிட்டில் இருந்தவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர். என்னுடைய நடிப்பை பார்த்து அத்தனை பேரிடமும் பாராட்டுகளை வாங்கியிருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு சும்மா படங்களில் தலைகாட்டுவது முக்கியமல்ல. கேரக்டர்தான் முக்கியம். கேலி கிண்டல் எல்லாம் நிறைய செய்திருக்கிறார்கள்.
என்னை குண்டா என்பார்கள், தடியா, 8 இட்லி எறா குழம்பு, 10 இட்லி பருப்பு சாம்பார் என்பார்கள். நான் படிக்க போகும் போது என் உடலை காரணம் காட்டி என்னை கஷ்டப்படுத்துவார்கள். வீட்டில் இருந்து பள்ளிக்கு என்னால் நடந்து கூட செல்ல முடியாது. அப்படியிருக்கும்போது பக்கத்தில் வந்து என்னை கிள்ளிவிட்டு ஓடி விடுவார்கள். கல்லை தூக்கி எறிவார்கள்.
குண்டாக இருந்தால் அவ்வளவு கேவலமா, எத்தனை நாள் வேதனைப்பட்டிருக்கிறேன் தெரியுமா. வகுப்பறையில் உட்கார்ந்து அழுவேன். ஆசிரியரிடம் சொல்லி அழுவேன், அவரும் ஒன்றுமில்லை தைரியமாக இரு என ஆறுதல் கூறுவார். ஆனால் யாரெல்லாம் என் மீது கல்லை எறிந்தவர்கள் எல்லாம் பின்னாளில் என்னிடம் வந்து ஆட்டோகிராப் வாங்கினார்கள். ரஜினி சாரையே கிண்டல் செய்தார்கள்.
கோவை மெடிக்கல் காலேஜில் நெற்றிக்கண் சூட்டிங். எஸ்பி முத்துராமன் இயக்குநர், பாபு சார் கேமராமேன். எல்லாம் ரெடி செய்துவிட்டார்கள். முதல் ஷாட் எடுக்க போகிறார்கள். அப்போது நிறைய பேர் உள்ளே புகுந்து எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்கள். ரஜினி சாரை அங்கிருந்து காப்பாற்றி அழைத்து செல்வதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.

ரஜினி சாருக்கு நிறைய கோபம் வரும். அதனால் அவரை வெறுப்பேற்றி அவர் கோபப்பட்டால் அதை பத்திரிகைகளில் போடுவார்கள். அதற்காக அவர்கள் உள்ளே வந்தார்கள். பணக்காரன் படத்தில் உசிலமணியாட்டம் உடம்பைத்தான் பாரு.. பாடலில் என்னையும் ரஜினி சாரையும் குளோஸ் அப்பில் காட்டுவார்கள். அப்போது நானும் ரஜினி சாரோடு லிப் மூவ்மென்ட் கொடுத்தேன். உடனே வாசு சார், டேய் அவர் மட்டும்தான்டா பாடணும் நீ ஏன் பாடுறே என கேட்டார். ஆனால் ரஜினி சார் இதை கேசுவலாக எடுத்து கொண்டார்.
நெற்றிக்கண் சண்டை காட்சியில் சொல்லித் தரும்போது ஒரு மாஸ்டர் ரஜினி சாரின் மூக்கில் தெரியாமல் குத்திவிட்டார். உடனே சில்லி மூக்கு உடைந்து ரத்தம் கொட்டுது... உடனே உள்ளே அழைத்துக் கொண்டு போய் அதை சரி செய்தார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் ஷாட்டுக்கு வந்துவிட்டார். அவர் அப்போது இருந்த ரேஞ்சுக்கு அடுத்த நாள் கூட எடுத்திருக்கலாம். ஆனால் அந்த கலை மீது அவருக்கு இருந்த ஆர்வம். இவ்வாறு குண்டு கல்யாணம் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications