சைந்தவிக்கு நல்ல மனசு.. எங்க வீட்டில் “இவங்க” ராஜ்ஜியம் தான் நடக்குது.. ஓபனாக பேசிய ஜிவி பிரகாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதல் மனைவியான சைந்தவியை பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்ட போது சைந்தவி குறித்து பகிர்ந்திருக்கிறார். அதை இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கடந்த வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல நடிகர்கள் திடீரென்று விவாகரத்து செய்தி அறிவித்தனர். இவர்களெல்லாம் பிரியவே மாட்டார்கள் என்று பார்த்து ரசித்த நடிகர்கள் திடீர் விவாகரத்து செய்தி சொன்னது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

GV Prakash Saindhavi

அதிலும் பலருடைய காதலை மெருகேற்றும் விதமாக உணர்வுபூர்வமான பாடல்களை இசை அமைத்த ஜிவி பிரகாஷ் மற்றும் அந்த பாடலுக்கு பாடி உயிர் கொடுத்த சைந்தவி இருவரும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்து இருந்தார்கள். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து பல வருடங்கள் காத்திருந்து தான் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இரண்டு குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு பேட்டிகளில் நல்ல விதமாகவே பேசி இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ஆத்வி என்ற பெண் குழந்தை இருக்கிறது. ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்காக பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது சைந்தவி குறித்தும் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் சைந்தவி எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே தெரியும்‌. சைந்தவிக்கு நல்ல மனது இருக்கிறது. ஆனால் சில காரணங்களால் எங்களால் திருமண வாழ்க்கையில் தொடர முடியவில்லை. இப்போது நாங்கள் நண்பர்களாக தான் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

GV Prakash Saindhavi

அதுபோல எங்களுடைய வீட்டில் எங்கள் மகளின் ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது. வார இறுதியில் என்னுடன் என் மகள் இருப்பார். மற்ற நாட்களில் அவங்க அம்மா கூட இருப்பாங்க. என் பொண்ணுக்கு என் மீது அதிக பாசம். ரொம்ப பொசஸ்னஸ்சா இருப்பாங்க. எது செய்தாலும் ஏன் செய்றீங்க? எதுக்காக செய்றீங்க என்று கேள்வி மேல கேள்வி கேட்பாங்க என்று அந்த பேட்டியில் ஜிவி பிரகாஷ் பேசி இருக்கிறார்.

அதுபோல ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவாகரத்து செய்தி அறிவித்திருந்தாலும் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியது கிடையாது. ஒரு சிலர் சில வருடங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விட்டு அதிலிருந்து வெளியே வந்துவிட்டால் பல்வேறு குற்றசாட்டுகள் வைப்பதை பார்த்திருப்போம். ஆனால் இவர்கள் தங்களுடைய கருத்து வேறுபாட்டை எந்த இடத்திலும் வெளியே காட்டியதில்லை.

GV Prakash Saindhavi

ஜிவி பிரகாஷின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசும் போது கூட சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் விவாகரத்து செய்யப்போற முடிவு முதலில் எங்களுக்கு தெரியாது, அவர்களுக்குள் பேசி இனி திருமண வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு எடுத்து அறிவித்த பிறகு தான் எங்களுக்கு அது தெரிய வந்தது.

நாங்களும் அதிர்ச்சியாக தான் இருந்தோம். சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு. எங்களை ரொம்ப பாசமா பார்த்துக்கிட்டாங்க. இப்போ கூட சைந்தவி திரும்ப வந்துவிட மாட்டாளா என்று நான் நினைக்கிறேன் என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+