சைந்தவியை பிரிந்த ஜிவி.. ஒரே காரில் பயணம்.. பொருளாதார சுதந்திரம், Matter of Understanding: பிரபலம்
சென்னை: சைந்தவி - ஜிவி பிரகாஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.. பிறகு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள். இதுகுறித்து டாக்டர் காந்தராஜ் சொல்லும்போது, பழைய காலத்தை வைத்து, இதுபோன்ற விஷயங்களை பேச முடியாது.. வெளிநாட்டு கலாச்சாரம் தற்போது தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் மாறி வரும் தற்போதைய குடும்ப உறவுகள் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
சைந்தவி - ஜிவி பிரகாஷ் இருவரின் மனுவானது, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினார்கள். இருவரும் மனதார பிரிவதாக கூறினார்கள்.. பிறகு கோர்ட்டிலிருந்து ஒரே காரில் ஏறி கிளம்பி சென்றார்கள்.

சைந்தவி - ஜிவி பிரகாஷ்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.. இதைப்பார்த்த நெட்டிசன்கள் "இவர்களின் விவகாரத்தை புரிஞ்சிக்கவே முடியலியே" என்று குழம்பிப்போய் கமெண்ட் செய்தனர்..
இதுகுறித்து, BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "இன்று லிவிங் டூ கெதர் கான்செப்ட் வந்தாச்சு.. கல்யாணமே செய்து கொள்ளவேண்டும் என அவசியமில்லை.. மேற்கத்திய நாகரீகம் வந்தாச்சு..
சுருக்கமாக சொல்லப்போனால், "நீயும், நானும் இணைந்து ஒரே வீட்டில் வசிக்கிறோம், சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வோம்.. அந்த பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், நீயும், நானும் தனியாக பிரிந்துவிடலாம். ஒருவேளை குழந்தைகள் பிறந்தால், அதையும் சரிசமமாக முடிவெடுத்து கொள்ளலாம் என்பதுதான் தற்போது வந்துவிட்டது.
பொருளாதார சுதந்திரம்
பெண்கள் இன்று இப்போது 25 வயதானாலும் தங்களது திருமணத்துக்கு யோசிக்கிறார்கள்.. சம்பாதிக்கணும், சொந்த காலில் நிற்க வேண்டும் என்று 35 வயது வரை கணக்கு போடுகிறார்கள்.
ஒரு விதவை, தன்னுடைய குழந்தைகளை தைரியமாக வளர்க்கிறாள்.. கணவன் இல்லாமலும் தனித்து அவளால் வாழ முடிகிறது. ஆனால், ஒரு ஆண் மனைவியை இழந்தால், மறுகல்யாணம் இல்லாமல் இருக்க முடியாது.
அன்று ஆண், தனக்கு கீழேயே பெண்ணை வைத்திருந்தான்.. அதேபோல, பொருளாதார சுதந்திரம் வரும்வரை பெண் என்பவள் கணவனுக்கு பயந்தே கிடந்தாள். புருஷன் விட்டுவிட்டு சென்றுவிட்டால், நம்முடைய நிலைமை என்னாகுமோ என்று பயமும், கவலையும் அன்று இருந்தது..
ஆனால், பெண்களுக்கு பொருளாதாரம் சுதந்திரம் இன்று வந்துவிட்டது. இந்த சுதந்திரம் கிடைத்துவிட்டதும், அப்போதே திருமண பந்தம் என்பது Matter of Understanding ஆகிவிடுகிறது.. பிடிக்கவில்லையானால் நண்பர்களாக பிரிந்துவிடுகிறார்கள்" என்பது உட்பட பல்வேறு விஷயங்களை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கலாச்சார சீரழிவு
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசும்போது, "மோசமான கலாச்சாரத்தின் அடையாளம் தான் ஜிவி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்து வழக்கு.. இவர்களை திரைத்துரையிலிருந்தே தூக்கி எறியணும். கலாச்சாரத்திற்கு நெருப்பு வைக்கக்கூடிய சம்பவங்கள்தான், திரைத்துரையில் பெரும்பாலும் நடக்கிறது.
ஒரே காரில் 2 பேரும் போகிறார்கள் என்றால், கருத்து ஒற்றுமையோடு இருப்பதாகத்தானே அர்த்தம்? கோர்ட்டுக்கு எதுக்கு வந்தாங்க? பொழுதுபோக்க வந்தாங்களா? இப்படியான சீரழிவு கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிச்சு வைத்ததே திராவிட இயக்கங்கள்தான்.. ஒரே காரில் வந்து டைவர்ஸ் கேட்டு, நீதிமன்றத்தை சைந்தவி தம்பதியினர் அவமானப்படுத்தியிருக்காங்க.. சட்டத்தை கேவலப்படுத்தி இருக்காங்க" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications