ஜிவி பிரகாஷுடன் டேட்டிங் போனேனா? சைந்தவியை பிரிய நான் தான் காரணமா? திவ்யா பாரதி கொடுத்த விளக்கம்
சென்னை: இசையப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இடையே காதல் இருப்பதாக வதந்தி பரவி வந்தது. அதற்கு ஜி.வி. பிரகாஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது எனவும், ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை இல்லை என நடிகை திவ்யா பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளி மாணவியாக இருக்கும்போதே பாட வந்த சைந்தவியை காதலித்த ஜிவி பிரகாஷ் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரது கூட்டணியில் வெளியான பாடல்கள் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு இருந்தது.
இருந்த போதும் கடந்த 2024ல், 11 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்
இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்ட பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.
அதே நேரத்தில் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தாலும் இசைக்காக இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து சைந்தவி பாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவுக்கு ஜிவி பிரகாஷ், நடிகை திவ்யா பாரதி இடையேயான காதல் தான் காரணம் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. ஜிவி பிரகாஷ், நடிகை திவ்யா பாரதியுடன் டேட்டிங் சென்றதாகவும் கூறப்பட்டது. ஜிவி பிரகாஷ் திவ்யா பாரதி இணைந்து நடித்த கிங்ஸ்டன் படத்தின் ப்ரோமோஷன்களில் இருவரும் கலந்து கொண்ட நிலையில் வெளிப்படையாகவே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் அதனை ஜிவி பிரகாஷ் மறுத்திருந்தார். தனது மனைவி உடனான பிரிவுக்கு திவ்யபாரதி காரணம் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
ஆனாலும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலாவி வந்தன. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வெளியிட்டுள்ள அவர் எனக்கு எந்த தொடர்பும் இல்லாத தனிப்பட்ட ஒரு குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,"எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒரு நடிகரை ஒருபோதும் டேட் செய்ய மாட்டேன், நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை" என கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications