சைந்தவி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. ஆனால் "அவங்களை" அடிச்சுக்க முடியுமா? வெளிப்படையாக பேசிய ஜிவி பிரகாஷ்
சென்னை: பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷ் தன்னுடைய மனைவியான சைந்தவியை கடந்த வருடத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கு பிறகு சைந்தவி குறித்து பேசி இருக்கிறார். அதில் சைந்தவி தனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் என்று கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை கடந்த வருடத்தில் அதிகமான சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர். அதிலும் இந்த ஜோடி எல்லாம் பிரியவே செய்யாது என்று நினைத்திருந்த ஜோடிகள் எல்லாம் தாங்கள் பிரிய போவதாக அறிவித்திருந்தார்கள். அதில் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவியும் ஒருவர்.

ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடி
இவர்கள் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணமும் செய்து இருந்தனர். இவர்களுக்கு ஆத்வி என்ற அழகான மகள் இருக்கிறார். பேட்டிகளில் சைந்தவி கலந்து கொள்ளும் போது தங்களுடைய காதல் கதை மற்றும் தான் கர்ப்பமாக இருக்கும் போது ஜிவி பிரகாஷ் பட்ட கஷ்டம் குறித்து பேசி இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் விவாகரத்து
ஆனால் இவர்கள் இருவரும் கலந்து ஆலோசித்து தாங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போகிறோம் என்று அறிவித்திருந்தார்கள். அதோடு தாங்கள் நண்பர்களாக தொடர்வோம் எங்களுடைய தொழிலில் இருந்து விலகவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்கள்.
பிரிவுக்குப் பிறகு ஒரே மேடையில்
சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது "பிறை தேடும் இரவிலே" என்ற பாடல் சேர்ந்து பாடியது பலரையும் ஃபீல் பண்ண வைத்தது. இவர்கள் இருவரும் பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் அந்த பாடலை ஒரே மேடையில் சேர்ந்து பாடி இருந்தார்கள். அதில் உள்ள வரிகளும் அவ்வளவு ஆழமான காதல் கதையை சொல்லும் வகையில் இருந்தது.
வதந்திகளுக்கு விளக்கம்
இருவருடைய பாடல்கள் ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தது. அதுபோல ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிவதற்கு காரணம் நடிகை திவ்யபாரதி என்று சில பேச்சுகள் எழுந்து வந்தது. அதற்கு சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். தங்களைப் பற்றிய வதந்திகளுக்கு இருவரும் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.

சைந்தவி குரல் மேஜிக்
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் ஜிவி பிரகாஷ் இசையில் யார் பாடினாலும் ஜிவி சைந்தவி ஜோடி சேர்ந்து பாடியது போன்று இருப்பதில்லையே அதற்கு காரணம் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு இளையராஜா இசையில் எல்லோரும் பாடி இருக்காங்க ஆனா எஸ்பிபி பாலசுப்ரமணியன்- ஜானகி மேம் சேர்ந்து பாடும் பாடல்கள் எவ்வளவு ஹிட் ஆகும் அதுபோலத்தான் நாங்கள் இருவரும், அதனால அவங்க கூட பணியாற்றுவது ரொம்பவும் ஸ்பெஷல்.
ஜிவி பிரகாஷ் விளக்கம்
எனக்கு சைந்தவியை ஸ்கூல் படிக்கும்போது இருந்தே தெரியும். அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்களுடைய குரல் அவ்வளவு இனிமையாகவும் ரசிகர்களின் மனதில் மேஜிக் செய்யும் வகையில் இருக்கும் என்று அந்த பேட்டியில் சைந்தவி குறித்து பெருமையாக ஜிவி பிரகாஷ் பேசி இருக்கிறார்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications