விவாகரத்து இருக்கட்டும்.. சைந்தவிக்காக ஜீ தமிழ் செய்த சிறப்பு வரவேற்பு.. அடடா க்யூட்டான டான்ஸ்
சென்னை: "பாடகி சைந்தவி" அவருடைய கணவரான இசையமைப்பாளர் "ஜிவி பிரகாஷை" விவாகரத்து செய்யப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவுத்திருந்தார். அதே நேரத்தில் சைந்தவி ஜீ தமிழில் "சரிகமப" நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த வார எபிசோடில் அவருக்கு பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சின்னத்திரை, வெள்ளி திரை என பல பிரபலங்கள் நண்பர்களாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு சிலருக்கு தொடர்ந்து பயணிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் காரணமாக பலர் இனி தொடர முடியாது என்ற நிலைக்கு வந்து விட அதிலிருந்து விலகி விடுகின்றனர்.

அந்த வகையில் இப்போது பாடகி சைந்தவி மற்றும் அவருடைய கணவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஜிவி பிரகாஷும் இணைந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து பிறகு தங்களுடைய ஃபீல்டில் நல்ல நிலைமைக்கு வந்ததும் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து குழந்தை பிறந்து இப்போது அந்த குழந்தைக்கு நான்கு வயது இருக்கும் போது இவர்கள் இருவரும் தாங்கள் பிரிந்து போக போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இது சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் பிரிய போகிறார்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று சில தினங்களாகவே செய்திகள் பரவி வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் சைந்தவி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களை அறிமுகப்படுத்துதல் வாரம் நடக்கிறது. அதில் சைந்தவிக்கு இந்த வார எபிசோடிற்கு பிரமாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. "அடடா மழைடா" என்ற பாடலுக்கு அங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் சைந்தவியும் க்யூட்டாக டான்ஸ் ஆடி இருக்கிறார். இவருக்கு அழகாக பாடல்கள் பாடம் மட்டும் தான் தெரியும் என்று நினைத்த ரசிகர்களுக்கு இவருடைய டான்ஸ் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
அதனாலையே பல ரசிகர்கள் சைந்தவியின் டான்ஸ் மற்றும் பாடலை தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ஒரு சிலர் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications