Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8th படிக்கும்போதே ஜிவி பிரகாஷை காதலிச்சேன்! விஜய் மனைவி சொன்னது! சைந்தவி எமோஷனல் த்ரோபேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி பாடகி சைந்தவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய போவதாக சில தினங்களாகவே செய்திகள் பரவி வந்த நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் இருவரும் தாங்கள் 11 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம் என்று நீண்ட விளக்கப்பதிவு ஒன்று வெளியிட்டிருந்தனர்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் பிரியப் போகிறார்கள் என்று செய்திகள் பரவிய போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இப்படி நடக்கக்கூடாது. இவர்கள் இருவரும் நல்ல தம்பதிகள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் இவர்கள் இருவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து பலரும் அதிர்ச்சியில் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

GV Prakash wife singer Saindhavi about to school love

இந்த நிலையில் சைந்தவி பேசிய பழைய வீடியோக்கள் இப்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் சைந்தவி தான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே ஜிவி பிரகாஷை காதலிக்க தொடங்கி விட்டேன் என்றும் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதையும் பேசி இருக்கிறார். அதாவது சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்திருக்கிறார்கள்

அப்போது சைந்தவி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஜிவி பிரகாஷ் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம். சைந்தவியின் கிளாஸ் மூன்றாவது ஃப்ளோரில் இருந்திருக்கிறது. ஜிவி பிரகாஷின் கிளாஸ் தரைத்தளத்தில் இருந்து இருக்கிறது. அதனால் சைந்தவி தன்னுடைய தோழிகளை வாங்க தரை தளத்திற்கு போய் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு வரலாம் என்று அடிக்கடி கூட்டிக்கொண்டு வருவாராம்.

அப்போது தோழிகள் எல்லாரும் எதற்காக இவள் மூன்று மாடி இப்படி அலைய வைக்கிறாள் என்று அலுத்துக் கொள்வார்களாம். ஆனால் அந்த நேரத்தில் யாருக்குமே சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் காதலிக்கும் விஷயம் தெரியாதாம். ஆனால் அந்த நேரத்தில் இவர்கள் இருவருமே காதலை ஒருவரிடம் ஒருவர் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். பார்வையால் மட்டும் தான் இவர்களுடைய காதலை பரிமாறிக் கொண்டிருந்தார்களாம்.

அதுபோல ஸ்கூலில் லைட் மியூசிக் டீம் என்று இருந்தது. அதில் ஜிவி பிரகாஷ் கீபோர்டு வாசிப்பாராம். ஜிவி பிரகாஷ் அந்த ஸ்கூலிலே படித்து வந்ததால் பல வருடங்களாக அங்கு கீபோர்டு வாசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எட்டாம் வகுப்பில் சைந்தவி அங்கு சேர்ந்ததும் அங்கு இருந்த சிலர் சைந்தவி நன்றாக பாடுவார் என்று சொல்லி அவரையும் அந்த லைட் மியூசிக் செய்திருக்கிறார்கள்.

இருவரும் முதல்முறையாக அங்கு தான் சந்தித்துக் கொண்டார்களாம். அதற்குப் பிறகு இவர்களுடைய லைட் மியூசிக் டீம் எங்கே போனாலும் இவர்கள்தான் முதல் பரிசை தட்டி இருக்கிறார்கள். அதுபோல நாங்க ஸ்கூல் படிக்கும்போது காதலித்தாலும் எங்கேயும் தனியா போனது கிடையாது. எப்போதும் நண்பர்களோடு தான் போவோம். அதனால் நண்பர்கள் பலருக்கும் நாங்கள் காதலித்தது தெரியாது.

பிறகு நாங்கள் காலேஜுக்கு போன பிறகுதான் நண்பர்களுக்கு எங்களுடைய காதல் விஷயம் தெரிந்தது. நாங்கள் ஸ்கூல் படிக்கும்போதும் சரி கல்யாணத்திற்கு பிறகும் சரி எங்களுடைய நண்பர்களோடு தான் வெளியே அதிகமாக போவோம். தனியாக இருவரும் மட்டும் போனது கிடையாது. நண்பர்கள் அல்லது உறவினர்கள் கூடத்தான் நாங்க வெளியே போவோம்.

அதுதான் எங்கள் இருவருக்குமே பிடிக்கும் என்று சைந்தவி பேசி இருக்கிறார். அதுபோல சைந்தவி ஜீவி பிரகாஷ் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அப்படி தான் "தெய்வத்திருமகள்" திரைப்படத்தில் இடம் பெற்ற "விழிகளில் ஒரு வானவில்" என்ற பாடல் சைந்தவி பாடியதற்காக நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பாராட்டி இருந்தாராம். அதற்குப் பிறகு சைந்தவிக்கும் சங்கீதாவிற்கும் நல்ல நட்பு உருவாகி இருந்ததாம்.

அதற்குப் பிறகுதான் "தலைவா" திரைப்படத்தில் விஜய்க்கு "யார் இந்த சாலை ஓரம்" என்ற பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி தான் பாடியிருக்கிறார். அதையும் சங்கீதா பாராட்டி இருந்தாராம். தலைவா திரைப்படத்திற்கு பிறகு தான் இவர்களுடைய காதல் எல்லோருக்கும் தெரியவந்தது என்று சைந்தவி கூறி இருக்கிறார். இந்த அளவிற்கு பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இப்போது என்ன காரணத்தால் பிரிகிறார்கள் என்று ரசிகர்களும் பல பிரபலங்களும் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+