“திரிஷா மேல கிரஷ் இருந்துச்சு... இப்போ இல்லை!” ஓபனாக பேசிய நடிகர் பேசில் ஜோசப்! என்ன இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசப் சமீபத்திய பேட்டியில் நடிகை திரிஷா குறித்து பேசிய ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக காமெடியாகவும் கூலாகவும் பதில் சொல்லும் பேசில் ஜோசப், இந்த முறை திரிஷா பெயர் வந்தவுடன் கொஞ்சம் பதறியபடி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நடிகர் பேசில் ஜோசப் பேச்சு
பேட்டி ஒன்றில் "உங்களுக்கு எந்த நடிகை மீது கிரஷ்?" என்று கேட்கப்பட்டபோது, சில நொடிகள் தீவிரமாக யோசித்த பேசில் ஜோசப், சிரித்தபடியே "திரிஷா மீது ரொம்ப கிரஷ் இருந்துச்சு" என்று கூறினார். உடனே பேட்டி எடுத்தவர் இதை கிண்டலாக பிடித்துக்கொண்டதும், பேசில் ஜோசப் சிரித்தபடியே "இப்போ இல்லை" என்று சொல்லி சமாளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பதறிட்டாரே
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், "ஏன் இப்படி திடீரென்று எஸ்கேப் ஆகுறீங்க?", "திரிஷா மீது கிரஷ் இல்லாதவர்கள் யாரு?", "அதை சொல்லி ஏன் இவ்வளவு பதற்றம்?" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 40 வயதை கடந்தும் இன்னும் இளமை மாறாத தோற்றத்துடன் ரசிகர்களை கவர்ந்து வரும் திரிஷாவுக்கு இளம் தலைமுறை ரசிகர்களும் தனி கூட்டமாக இருப்பது புதுசல்ல.

மகிழ்ச்சியில் திரிஷா
உண்மையில் சமீப காலமாக திரிஷாவுக்கு இது செம லக்கி கட்டமாகவே அமைந்திருக்கிறது. மே மாத தொடக்கத்தில் தன்னுடைய பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய திரிஷா, பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் சென்று வந்தார். அதற்குப் பிறகு வெளியான சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியின் 'கருப்பு' திரைப்படம் அவருடைய கேரியருக்கு இன்னொரு முக்கிய வெற்றியாக மாறியுள்ளது.
இந்த படத்தில் சும்மா வந்து போகும் கதாபாத்திரமாக இல்லாமல், கதைக்க முக்கியமான பாத்திரத்தில் திரிஷா நடித்திருப்பது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. படம் ஏற்கனவே உலகளவில் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது. இதனால் திரிஷாவும் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நண்பரின் வெற்றி
இதற்கிடையில், திரிஷாவின் நெருங்கிய நண்பரான முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியும் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்களும் அப்போது வைரலானது. சினிமா, நட்பு, வெற்றி, ரசிகர்கள் அன்பு என திரிஷாவைச் சுற்றி தற்போது முழுக்க முழுக்க பாசிட்டிவ் அலை ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் கருப்பு வெற்றி, இன்னொரு பக்கம் தொடர்ந்து ரசிகர்களின் கவனம், இப்போது பேசில் ஜோசப் போன்ற பிரபலங்களின் ஓபன் பாராட்டு-இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் ஒரே வார்த்தையில் சொல்வது என்ன தெரியுமா? "இது திரிஷாவின் சீசன்!"
-
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications