குக் வித் கோமாளிக்கு வரும் முன்னணி நடிகை..வந்ததும் புகழுக்கு வைத்த செக்.. மீண்டும் வந்த மதுரை முத்து
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா கலந்து கொண்டிருக்கிறார்.
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் பிப்ரவரி 25 ஆம் தேதி மற்றும் முதல் 26 ஆம் தேதிகளுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
இந்த ப்ரோமோவில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியில் புகழை கலாய்த்து ஹன்சிகா பேசிய வார்த்தையை ரசிகர்கள் பாராட்டி.
அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் மதுரை முத்து மீண்டும் வந்திருக்கிறார்.

ஹன்சிகா அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் தொடங்கி ஒரு சில வாரங்கள் ஆன நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவை சிறப்பு விருந்தினராக அறிமுகம் செய்து இருக்கின்றனர். ஏற்கவே ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் அது அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படாத நிலையில் அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புகழுக்கு வார்னிங்
அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஹன்சிகா பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்ட நிலையில், நீங்க இங்க வந்தது ரொம்ப சந்தோசம் எங்களுக்கு என்று தர்ஷன் கூற, ஹன்சிகாவிற்க்கு செப்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு செய்கின்றனர். பின்பு நீங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து இருக்கீங்களா என்று ரக்ஷன் கேட்க அதற்கு பார்த்திருக்கிறேன். ரீல்ஸில் பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சந்தோஷப்பட அப்போது நீங்க நிறைய பொண்ணுங்க கிட்ட பழகிக்கொண்டு இருக்கீங்க என்று ஹன்சிகா வார்னிங் கொடுக்க, அதற்கு புகழ் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்று அதிர்ச்சியாக கேள்வி கேட்க, அதற்கு ஆமாம் என்று ஹன்சிகா பதில் சொல்ல இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

மீண்டும் மதுரை முத்து
இந்த நிலையில் இந்த பிரமோவில் ஹன்சிகாவை பார்த்து ரசித்த ரசிகர்கள் அருகில் இருக்கும் மதுரை முத்துவை பார்த்ததும் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் நான்காவது சீசனுக்கு மதுரை முத்து வந்ததால் அவருக்கு அதிகமான வரவேற்பு கமாண்டுகள் குவிந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் மதுரை முத்துவின் ஜோக்குகள் எப்போதும் எங்களுக்கு பிடிக்கும் என்றும் நீங்கள் தொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் கேள்விகள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோமாளிகள் பலர் தொடர்ந்து வருவதில்லை அவர்கள் திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது என்று பலர் கூறி இருக்கும் நிலையில், இந்த வாரம் பாலாவை காணவில்லை. இந்த நிலையில் பாலாவிற்கு பதிலாக தான் மதுரை முத்து வந்திருப்பாரா? என்று பலர் கேள்வி எழுப்ப, சிவாங்கி மட்டும் குக்காக இருந்தாலும் கோமாளிகளோடு சேர்ந்து லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறாரே? இது என்ன நியாயம் என்று இன்னும் ஒரு சில ரசிகர்கள் கருத்து கமெண்ட்களில் கருத்து எழுப்பி வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications