கணவரோடு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த ஹன்சிகா.. இதற்குள் இவ்வளவு நாள் ஆகிடுச்சா? குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய இரண்டாவது திருமண நாள் அன்று கணவருக்கு வாழ்த்து சொல்லி, அவரோடு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்ற பலமொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் முதல் படமே இவருக்கு பெரிய அளவில் பெயர் வங்கி கொடுத்தது.

எங்கேயும் காதல் படத்தில் இவருடைய கியூட்டான நடிப்பு, புசு புசுவென்ற இவருடைய உடல் அமைப்பை பார்த்து ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இவரை அடுத்த குஷ்பு என்று பலர் அழைத்து வந்தனர். எங்கேயும் காதல் பல பாடல்கள் இப்ப வரைக்கும் ஹிட்டவே இருக்கிறது. அதிலும் நங்கை நிலவின் தங்கை என்ற பாடல் இவருக்காகவே எழுதியது போல இருந்தது.
எங்கேயும் காதல் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் உடன் மாப்பிள்ளை, விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2 என்று பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரியாணி, மான் கராத்தே, வாலு, அரண்மனை 2 என்று அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென்று உடல் எடை குறைத்து மாறி போயிருந்தார்.

நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் புசுபுசுவென்று இருந்தாலும் உடல் எடை குறைத்த பிறகு அவருக்கு பில்லா போன்ற பல ஹிட் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதுபோல ஹன்சிகாவும் இரண்டாவது இன்னிங்ஸில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு பெரிய அளவில் ஹிட்டு கொடுக்கவில்லை. ஆனால் தன்னுடைய ஐம்பதாவது படமான மகா படத்தை அதிக அளவில் நம்பி இருந்தார். அந்த படமும் அவர் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை.

இதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹா கட்டாரியா என்ற தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தன்னுடைய கணவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு “இரண்டாவது திருமண நாள் வாழ்த்துக்கள் பேபி.. உன்னை நான் ரொம்பவும் நேசிக்கிறேன்” என்று தன்னுடைய கணவரை டேக் செய்து போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு அதிகமான ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications