சல்லி சல்லியாய் போன சிவாஜி சொத்து? தப்பித்த அன்னை இல்லம்.. மகிழ்ச்சி தரும் பிரபுவின் நேர்மை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னை இல்லம் ஜப்தி தொடர்பான வழக்கு கோர்ட்டுக்கு வந்தபோது நீதிபதி, "நீங்கள் கடனை செலுத்திவிட்டு, அந்த பணத்தை உங்கள் அண்ணனிடம் வாங்கி கொள்ளலாமே" என்று ஆலோசனை சொன்னார். அதற்கு பிரபு, "அன்னை இல்லம் கடன் மட்டுமேயில்லை, இதுபோல பல இடங்களில் அண்ணன் ராம்குமார் கடன் வாங்கியிருக்கிறார். யார் யாருக்கு அவர் கடன் தர வேண்டும் என்று தெரியாது. அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்று பதிலளித்திருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து கூறியிருக்கிறார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "2 நாட்களுக்கு முன்பே இதுகுறித்து நான் பேசியிருந்தேன்.. அதாவது, சிவாஜி குடும்பத்தில், அவர்களுக்குள்ளே இணக்கமாக பேசி, யாராவது ஒருவர் முன்வந்து கடனை அடைத்துவிட்டு, பிறகு குடும்பத்துக்குள்ளேயே அந்த கடனை அடைத்துக் கொள்ளலாம். அதாவது வெளிக்கடனை முதலில் தந்துவிட்டு, குடும்ப கடனை பிறகு அவர்களுக்குள் தீர்த்து கொள்ளலாம் என்று கூறியிருந்தேன்.

television Prabhu Annai Illam

அன்னை இல்லம் கடன்

இதே கருத்தைதான் இன்று நீதிமன்றம் ஆலோசனையாக கூறியிருக்கிறது. ஆனால், பிரபுவின் நிலைப்பாடு வேறுமாதிரியாக உள்ளது.. நாம் அதை குறையாகவும் சொல்ல முடியாது..

"இதுவரை 1 ரூபாய்கூட யாரிடமும் கடன் வாங்கியதில்லை" என்ற வார்த்தையை நீதிமன்றத்தில் பிரபு சொல்லியிருக்கிறார். பிரபுவின் இந்த வார்த்தையில் நேர்மை உள்ளது.. பிரபுவை பெருமையாக பார்க்கிறேன். சிவாஜிக்கேற்ற பிள்ளை.. இப்படி சொல்வதற்கு நேர்மையும், துணிச்சலும் வேண்டும்.
அதற்காக கடன் வாங்குவது குற்றம் என்று சொல்லவில்லை. சினிமா என்பதே சூதாட்டம்.. அப்படிப்பட்ட சினிமாவில் இருந்துகொண்டு 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை என்று சொல்வதற்கு நேர்மையும் தைரியமும் தேவை. அது பிரபுவிடம் உள்ளது. பிரபு பெருமைக்குரிய நபராக உள்ளார்.

நேர்மை தவறியுள்ளனர்

அதேபோல, சிவாஜியின் மகன், பேரன் யாராக இருந்தாலும், நாணயம் தவறியிருக்கிறார்களே தவிர, மோசடி பேர்வழிகள் கிடையாது.. குறிப்பிட்ட தேதியில் பணத்தை கட்டுவதில் நேர்மை தவறியிருக்கிறார்கள்.. சொன்ன தேதியில் பணத்தை தரமுடியவில்லை.. அவ்வளவுதான், தரமுடியவில்லை என்பதற்கும், தரமுடியாது என்பதற்கும், தலைமறைவாவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. எல்லாரும் ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் இருக்கிறார்களே தவிர, எங்கும் சென்றுவிடவில்லை.

இப்போது குடும்பத்துக்குள் ஒரு சுமூக முடிவுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தாலும், அது அவர்களது குடும்ப விஷயம்.. ஒவ்வொருரின் தனிப்பட்ட முடிவு.. அதற்குள் நாம் தலையிட கூடாது.

கடனை பிரபு ஏன் அடைக்க முன்வரவில்லை

பிரபு சொல்வதுபோல், ராம்குமார் வேறு எங்கெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கிறார் என்று தெரியாது. அப்படியிருக்கும்போது, அன்னை இல்லம் தொடர்பான கடனை அடைக்க பிரபு முன்வர முடியாது. அப்படி கடனை அடைத்தால், மற்ற இடங்களில் ராம்குமாருக்கு கடன் கொடுத்தவர்களும், கடனை கேட்டு பிரபுவிடம் வரக்கூடும்.

எனவே, கடன்களை எல்லாம் அடைப்பதைவிட, அன்னை இல்லம் வீட்டை காப்பாற்றுவதுதான் பிரபுவின் முதன்மை கடமையாக இருக்கிறது. அதனால் பிரபு கோர்ட்டில் முன்வைத்த வாதம் சரியானதே. தலைவலி வந்தவர்கள்தான் தைலம் தேய்க்க வேண்டும். எனவே ராம்குமாரின் பிரச்சனையை அவரேதான் சரி செய்து கொள்ள வேண்டும்.

வீட்டை மீட்ட பிரபு

அதேபோல, அண்ணன் கடன் என்றுதான் கோர்ட்டில் பிரபு சொல்கிறாரே தவிர, அண்ணன் மகன் கடன் என்று எங்குமே சொல்லவில்லை.. மொத்தத்தில் பிரபுவின் அறிக்கை மிக நேர்மையாக இருந்தது. வீட்டின் ஒருபாகத்தை விற்று அண்ணனின் கடனை அடைப்பதைவிட, அன்னை இல்லம் முழுமையாக காப்பாற்றப்பட வேண்டும் என்பதே பிரபுவின் எண்ணமாக உள்ளது. அந்தவகையில் ஜப்தியிலிருந்து சிவாஜியின் வீட்டை பிரபு காப்பாற்றிவிட்டார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+