Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த "திருமணம்".. 20ம் தேதி முதல் மீண்டும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் மனதைக் கொள்ளையடித்த திருமணம் சீரியல் 20ம் தேதி முதல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

Recommended Video

    90s காலக்கட்டத்துக்கு மீண்டும் திரும்பிய இந்தியா

    இந்த லாக்டோன் டைம் மக்களின் வாழ்க்கையில் ரொம்பவே மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. எவ்வளவு பிஸி லைஃப்ல இருந்தவர்களையும் வீட்டில் அமர வைத்து ஒரு பாடு படுத்தியது. இருந்தாலும் இந்த நோயின் தாக்கமும் குறைந்த மாதிரி தெரியல.

    வீட்டில் இருக்கும்போது பொழுதுபோக்கே மக்களுக்கு சினிமாக்கள்தான். அதுவும் இப்போ மூடியாச்சு இதனால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமலும் பொழுதுபோக்கு இல்லாமலும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருந்த இந்த நேரத்தில்தான் அரசு சின்னதா ஒரு சலுகை கொடுத்திருக்கிறது.

    ஷூட்டிங்

    ஷூட்டிங்

    சின்னத்திரை மட்டும் உரிய பாதுகாப்புடன் திரைப்படங்களை படப்பிடிப்பு ஏற்படுத்தலாம் என்று சொல்லி இருக்காங்க. இது சின்னத்திரையில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு பெரும் மன நிம்மதியை அளித்தது. இருந்தாலும் சில சீரியல்கள் இந்த டைம்ல நிறுத்தவும் செய்திருக்கிறார்கள். லாக் டவுன் டைம்ல வேற வேற மாநிலங்களில் கதாநாயகிகளும் கதாநாயகர்களும் மாட்டிக்கொண்டனர்.

    திருமணம் சீரியல்

    திருமணம் சீரியல்

    இப்ப இருக்கிற இந்த டைம்ல இ பாஸ் போன்ற பிரச்சனைகளால் சிலரால் வர முடியவில்லை. இதனால் சில சீரியல்கள் முடித்துவிட்டார்கள். இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இருந்தாலும் தங்களுக்கு பிடித்த சில சீரியல்கள் புதுபொலிவுடன் வருவதை நினைத்து ஆறுதல் அடைந்து விடுகிறார்கள். அப்படி தான் திருமணம் சீரியலும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

    கலர்ஸ் டிவி

    கலர்ஸ் டிவி

    படப்பிடிப்பு தான் ஆரம்பித்து இருந்தார்களே தவிர எந்த தேதி ஒளிபரப்பப்படும் என்று சொல்லவில்லை. ஆனால் இப்போது வரும் 20ஆம் தேதி முதல் கலர் தமிழில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரொம்ப சந்தோசத்தில் உள்ளனர். இந்த சீரியலில் கதாநாயகியாக ஸ்ரேயா ஆஞ்சன் நடித்துக்கொண்டிருக்கிறார். கதாநாயனாக சித்து சித் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நிஜ ஜோடி போல

    நிஜ ஜோடி போல

    இவர்கள் ஜனனி - சந்தோஷ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரசிகர்கள் இவர்களை உண்மையிலேயே நிஜ ஜோடின்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு இவர்களின் நடிப்பு ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இந்த சீரியலின் கதை ஏற்கனவே பல படங்களிலும் சீரியல்களில் பார்த்திருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்ததாக எடுத்திருக்கிறார்கள்.

    பறக்கும் முத்தம்

    பறக்கும் முத்தம்

    ஜனனி சந்தோஷ் போட்டோஸ்கள் தான் இப்போ எல்லா வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சாங் காக இருக்கிறது அந்த அளவுக்கு இளம் ரசிகர்களுக்கும் இவர்களை ரொம்பவும் பிடித்திருக்கிறது. லாக்டோன் டைம்ல இவங்கள ரசிகர்கள் ரொம்பவும் மிஸ் பண்றாங்களாம். அதனால இருவரும் அவரவர்கள் வீட்டிலிருந்து முத்தத்தை பறக்கவிட்டு வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்கள். இது வைரலாக பரவிக் கொண்டிருந்தது.

    ரசிகர்கள் ஆர்வம்

    ரசிகர்கள் ஆர்வம்

    இது ரசிகர்களுக்காக எங்களை அவர்கள் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக என்பதற்காகதான் இப்படி வீடியோ போட்டு இருக்கோம் என்று கூறியிருந்தார்.

    இப்போ இவர்களின் சீரியல் மறுபடியும் டிவியில் ஒளிபரப்பாகும் நினைத்து ரசிகர்கள் சந்தோசமாக இருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல தன்னுடைய இணையதளத்தில் இருவரும் சேர்ந்து ப்ரோமோ வீடியோ ஒன்னு போட்டு இருக்காங்க. அதில் ரசிகர்களையும் உங்கள ரொம்ப மிஸ் பண்றாங்களாம். அதனால சீக்கிரமா உங்க வீடு தேடி நாங்க வருகிறோ.ம் மேலும் இந்த டைம்ல நீங்க ரொம்ப பாதுகாப்பாக இருங்க அப்படின்னு சொல்லியிருக்காங்க.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+