Happy Raj Review: ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் எப்படி இருக்கு? “ஜெயிச்சிட்ட மாறா” கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில், இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஹாப்பி ராஜ்" (Happy Raj movie review) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீப காலமாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், இந்த படமும் அதே போல இருக்குமோ என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு "ஹாப்பி ராஜ்" ஒரு சர்ப்ரைஸ் ஹிட் போல மாறி வருகிறது. "இந்த படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, கண்டிப்பா தியேட்டருக்கு போய் பாருங்க" என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி வருகின்றன.

ஹாப்பி ராஜ் படத்தின் கதை
இந்த படத்தின் மையக்கரு அப்பா - மகன் உறவு. சிறு வயதில் தந்தையை ஹீரோவாக பார்க்கும் குழந்தைகள், வளர வளர அவர்களை வேறுபட்ட பார்வையில் காண ஆரம்பிப்பார்கள். ஆனால், எந்த நிலையிலும் தந்தை தனது குழந்தையை குழந்தையாகவே பார்க்கிறார் என்ற உணர்வை படம் மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்துரைக்கிறது. மேலும், ஒருவரின் தோற்றம் அல்லது சமூக கருத்துக்களை வைத்து பெற்றோரை மதிப்பிடக் கூடாது என்ற முக்கியமான செய்தியையும் படம் சொல்லுகிறது.
படத்தின் பிளஸ்
முதல் பாதி முழுக்கவே ஜாலியான, லைட்-ஹார்ட்டட் காட்சிகளால் நிரம்பி இருக்கும் இந்த படம், இளைஞர்களை கவரும் விதமாக சிரிப்பையும் பொழுதுபோக்கையும் வழங்குகிறது. இரண்டாம் பாதியில் கதை முழுக்க எமோஷனல் கோணத்தில் நகர்ந்து, குடும்ப உறவுகளையும் கிராமத்து பின்னணியையும் அழகாக வெளிப்படுத்துகிறது. இதனால் அனைத்து தரப்பினரையும் படம் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக பேசப்படுவது ஜார்ஜ் மரியனின் நடிப்பு. பல படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்த அவர், இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பால் கதை முழுவதையும் தாங்கி நிற்கிறார். அதனால் அவரையே இந்த படத்தின் "உண்மையான ஹீரோ" என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஜிவி பிரகாஷ் கம்பேக்
சமீபத்தில் வெளியான யூத் திரைப்படத்தை விட பல மடங்கு இந்த படம் கவர்ந்ததாகவும், குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கு படம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் விமர்சனங்கள் பாசிட்டிவாக இருந்ததால், மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருகிறது. வரும் வார இறுதியில் வசூல் மேலும் உயரும் பட்சத்தில், "ஹாப்பி ராஜ்" இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு அதிகம்.
மக்கள் விமர்சனம்
மொத்தத்தில், "ஹாப்பி ராஜ்" ஒரு எளிய கதை சொல்லும் முறையுடன், காமெடி, எமோஷன் மற்றும் நல்ல கருத்தை இணைத்து கொடுத்துள்ள குடும்ப படம். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றவர்களையும் திருப்திப்படுத்தும் இந்த படம், "ஹாப்பியா" பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல என்டர்டெய்னராக அமைந்துள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications