கண்ணில் தாபம்.. ஏதோ ஒரு சோகம்.. பிளாக் அன்ட் ஒயிட்டில் கலங்கடிக்கும் ஹரிப்ரியா!
சென்னை: சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹரிப்ரியா கண்களில் சோகம் ததும்ப பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் ஏக்கத்தையும் கூட்டி வருகிறார்.
அழகான வில்லியாக கண்மணி சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹரிப்பிரியா தற்போது மீண்டும் கதாநாயகியாக ஜி தமிழில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தான் வைரலாக பரவி வருகிறது.
வெளியே சிரித்து கொண்டிருக்கும் பலரின் வாழ்க்கையில் வெளியே தெரியாத பல சோகங்கள் இருக்குமென்று போஸ்ட் போட்டிருக்கிறார்.

காதல் டூ மோதல்
ஏற்கனவே அவருக்கும் அவரது காதல் கணவருக்கும் பிரச்சினை விவாகரத்து வரைக்கும் வந்து போய்க்கொண்டிருக்கிறது. இவரது மகன் இவருடன் இருக்கும் நிலையில் அவரது கணவரும் என் மகனை பார்க்க வேண்டும் என்று போலீசில் கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுத்து ஒரு பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இருவரும் ஆளுக்கொரு பக்கம்
இவரும் இவரது கணவரும் தங்களது வேலைகளில் பிசியாக தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவரும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய கணவரும் சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

யார் கண் பட்டதோ
இவரும் இவரது காதல் கணவர் ஆனா கௌதமும் காதலித்து வீட்டில் சம்மதத்தோடுதான் திருமணம் செய்து கொண்டனர். பின்பு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு வரைக்கும் ரொம்பவும் சந்தோஷமாகத்தான் இருந்து வந்தனர். அடிக்கடி இவர்களின் டிக் டாக் வீடியோக்கள் பிரபலமாகி வந்தது. அது மட்டுமல்லாமல் ஜோடி என்றால் இவர்தான் ஜோடி என்று கூறும் அளவிற்கு தான் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

வீசியது புயல்
திடீரென்று அவர்களின் வாழ்கையில் யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. இந்த அளவிற்கு இருவருமமுட்டிக் கொண்டு விட்டனர் .கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் என் மனதில் காதல் மாறவில்லை என்று இவர் கொஞ்ச நாளைக்கு முன்பாக ஒரு போஸ்டில் போட்டிருந்தார். தற்போது இவருடைய இந்த சோகக் போட்டோவை பார்த்ததும் பல ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

எங்கே அந்த சிரிப்பு
எப்போதும் சிரித்த முகமாக பார்க்கும் உங்களை இந்த மாதிரி ஒரு கோலத்தில் எங்களால் பார்க்க முடியவில்லை தயவுசெய்து இப்படி போஸ்ட் போடாதீர்கள் என்று அன்பு கட்டளை இடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் நீங்கள் மீண்டும் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழுங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்கள் என்றும் இவருக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

மனசுக்கு வலிக்குமே
சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி பிரபலமாக இருந்தாலும் சரி அவர்களுக்கு மனது என்று ஒன்று இருக்கத்தானே செய்கின்றது .அதிலும் காயங்கள் துரோகங்கள் ஏக்கங்கள் எல்லாம் நிறைந்து தான் இருக்கின்றது. எல்லோரும் எப்போதும் இரண்டு முகத்தோடு தான் இருக்கின்றனர் .வெளி உலகத்திற்கு ஒரு முகத்தைக் காட்டிக்கொண்டு மனதிற்குள்ளே ஒரு முகத்தை அழுது கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவு
அந்த மாதிரிதான் தற்போது இவர்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இவரும் இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவும் இணைந்து நடிக்கும் சீரியலை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த சீரியலுக்கு பலதரப்பட்ட ரசிகர்களிடம் இருந்தும் ஆதரவு வருகின்றதாம்.

ஏக்கம் இருக்கும்தானே
அதனால் நீங்கள் உங்களது வேலைகளில் கவனம் செலுத்துங்கள் மனதிற்கு பிடிக்காததை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். என்றும் ஏக்கத்திற்கு கான காரணம் தெரியாமலும் அறிவுரை வழங்கி வருகின்றனர் ரசிகர்கள். தற்போது தனது யூடியூப் சானலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரும் தொகுப்பாளர் அசாரும் இணைந்து இந்த சானலை கலக்கலாக கொண்டு சென்று கொண்டுள்ளனர்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications