பப்ளி ஹன்சிகா.. கேர்ப்ரீ ரைசா.. முத்தம் கொடுத்த ஹரீஷ்.. முகம் சிவந்த ஷில்பா!
சென்னை: சன்டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகை ஷில்பா மஞ்சுநாத் இருவரும் வந்திருந்தனர். இவர்கள் இருவரும் நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
சிந்து சமவெளி உள்ளிட்ட சில படங்களில் ஹரீஷ் நடித்திருந்தாலும், பிக்பாஸ் முதல் சீசனில் இவர் கலந்துகொண்ட நிலையில், இவருக்கு பியார் பிரேம காதல்னு ஒரு படம் ஹிட் கொடுத்திருக்கு.இவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் அதே பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட நடிகை ரைசா.
இப்போது ஷில்பா மஞ்சுநாத்துடன் இணைந்து ஹரீஷ் நடித்த இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்னு ஒரு படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு.

சிறுகதையில்
படத்தின் பெயரே வித்தியாசமா இருக்கேன்னு கேட்டப்போ, இந்த டைட்டில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சார் சிறுகதையிலிருந்து எடுத்தது. முதலில் வித்தியாசமாக இருந்தாலும், சொல்ல சொல்ல நல்லா பழகிப் போச்சு.என்றார் ஹரீஷ்

நயன்தாரா
நடிகை நயன்தாரா கிரேட். அவர் வளர்ச்சி என்பது ஆரம்ப காலக்கட்டத்திலிருந்து பார்த்தால் கிரேட்னுதான் சொல்லணும். ஹன்சிகா பப்ளி, ரைசா எதையுமே பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. நடந்துருச்சா அடுத்தது என்ன பண்ணலாம்னு போயிருவாங்க. கேர் ஃபிரீ கேரக்டர் என்கிறார்.

ஷில்பா
யாருக்கு முதன் முதலா முத்தம் கொடுத்தீங்கன்னு கேட்டபோது, ஹரீஷுனு அவர் காமிக்க, என்னங்க படத்துக்காகத்தானே குடுத்தீங்கன்னு சிரிச்சார் ஹரீஷ். படத்தில் முத்த காட்சியும் இருக்கும் போல.

பின்னணி
தாடி எதுக்கு வச்சிருக்கீங்க.. உங்களுக்குள்ள எதுவும் காதல் நினைவு, தோல்வின்னு இருக்கான்னு கேட்ததற்கு, தாடி எடுத்தா ரொம்ப சின்ன பையன் மாதிரி தெரிவேன். இப்போ முகத்தில் மெச்சூர்ட் இருக்குன்னார். 2010ல் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரீஷுக்கு இப்போதுதான் நேரம் வொர்க்-அவுட் ஆக ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications