நொந்துட்டு துபாய்க்கு ஓடிய சிம்பு.. தக் லைஃப் படத்தில் ரவி மோகன்? முத்த மழை பாட்டு எங்கே: பிரபலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ரவி மோகன் சிறப்பாக நடித்திருந்ததால், தக் லைஃப் படத்திற்கும் அவரையே புக் செய்யலாம் என முடிவானது.. ஆனால், தன்னுடைய கேரக்டர் அதில் பெரிதாக இல்லாததாலும், தன்னுடைய எதிர்பார்ப்புக்கு கேரக்டர் இல்லாததாலும், அந்த படத்தில் நடிக்க முடியாது என்று ரவி மோகன் சொல்லிவிட்டார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Public Wing என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தக் லைஃப் படத்தில் கமல் மட்டுமே நடிக்கவிருந்தது.. பிறகுதான் திரைக்கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இறுதியில் 2வது ஹீரோவும் இதில் நடிக்க முடிவானது..

ரவி மோகன் கேரக்டர்
இதற்கு ஜெயம் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.. காரணம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ரவி மோகன் சிறப்பாக நடித்திருந்ததால், தக் லைஃப் டத்திற்கும் அவரையே புக் செய்யலாம் என முடிவானது..
ஆனால், தன்னுடைய கேரக்டர் அதில் பெரிதாக இல்லாததாலும், தன்னுடைய எதிர்பார்ப்புக்கு கேரக்டர் இல்லாததாலும், அந்த படத்தில் நடிக்க முடியாது என்று ரவி மோகன் சொல்லிவிட்டார்..அதேபோல பொன்னியின் செல்வன் படத்தில் சிம்புதான் முதலில் நடிக்கவிருந்தது..
சிம்பு நடித்தால் நாங்கள் இந்த படத்தில் நடிக்க மாட்டோம் என்று சொல்லி சில முக்கிய நடிகர்கள் விலகினார்கள். அந்த சூழ்நிலையை கண்ட சிம்பு, பெருந்தன்மையுடன் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தானே விலகிக் கொண்டார்..
இதனால் தக் லைஃப் படத்தில் சிம்பு தேர்வானார்.. ஏற்கனவே மணிரத்னம் படமான செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருந்தார்.. எனவே, தக் லைஃப் படத்திற்காக சிம்புவிடம் பேசப்பட்டது. அப்போதுகூட சிம்பு, தன்னுடைய கேரக்டர் மிகவும் சிறியதாக இருப்பதாக சொன்னாராம்.
சிம்பு மணிரத்னம்
இதற்கு பிறகே கமல், மணிரத்னம் இருவரும் பேசி சிம்புவின் கேரக்டரை பெரிதாக்கினார்கள்.. னால் தக் லைஃப் படம் நல்லா இல்லை என்று ரசிகர்களே வெளிப்படையாக சொல்ல துவங்கிவிட்டார்கள்.,. யாருமே ரசிக்க முடியாத மொக்கை படத்தை தந்துள்ளதாக விமர்சனங்கள் வருகின்றன..
ஏஆர் ரஹ்மான் எல்லா பாடல்களையுமே இந்த படத்துக்காக சூப்பராக இசையமைத்து தந்துள்ளார்.. அதிலும் முத்த மழை பாட்டு, விண்வெளி நாயகா இரண்டுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது..இந்த முத்த மழை பாட்டை சின்மயி மேடையில் பாடவும், தமிழில் ஏன் சின்மயியை பாட வைப்பதில்லை? என்ற விவாதங்களும் வெடித்தன..
அந்த அளவுக்கு முத்த மழை பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.. ஆனால் படத்தில் அந்த பாட்டையே காணோம்.. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்..
முத்தமழை பாட்டு
ஆடியோ வெளியீட்டு விழாவில், ரசிகர்களிடம் இந்த பாட்டை பாடி, ஆர்வத்தையும் தூண்டிவிட்டுவிட்டு, கடைசியில் படத்திலிருந்தே அந்த பாட்டை தூக்கிவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.. இந்த பாட்டை படத்தில் பயன்படுத்தாமல் போனதற்கு காரணம் சின்மயி சர்ச்சை என்றும் சொல்கிறார்கள்..
அதாவது சின்மயி பாடிய முத்த மழை பாட்டை படத்தில் வைக்க வேணடாம் என்று மணிரத்னத்துக்கு ஒரு அழுத்தம் தரப்பட்டதாகவும் தகவல் உள்ளது.. அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல யூகங்களையும் மக்கள் பதிவிட்டு வருகிறார்கள். பாட்டை பார்ப்பதற்காகத்தான் டிக்கெட் வாங்கிட்டு வந்தோம், கடைசியில் அந்த பாட்டையே காணோம் என்று ரசிகர்கள் குமுறுகிறார்கள்..
துபாய் சென்ற சிம்பு
மறுநாள் படம் ரிலீஸ் என்றால், அதற்கு முந்தின நாள்தான் இப்படத்தை கமல், சிம்பு வேறு வேறு இடங்களில் பார்த்துள்ளனர்.. இந்த படத்தை பார்த்து முடித்ததுமே, துபாய்க்கு கிளம்பி சென்றுவிட்டார்.. மனதில் கோபம் இருந்ததா? வருத்தமா? சரியில்லாத படத்தை தந்துவிட்டார்களே என்ற கோபம் இருந்ததா? தெரியவில்லை.. மொத்தத்தில், கமல் இந்த படத்தில் பலிகடா ஆக்கப்பட்டாரா தெரியவில்லை, ஆனால், சிம்பு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
More From
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications