80ஸ்க்கு போய்ட்டாங்களா? சின்னத்திறை முதல் சினிமா நடிகைகள் வரை... ஒரே ரெட்ரோ காய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமை திறந்தால் இப்பதெல்லாம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஒரு பக்கம் லேட்டஸ்ட் மாடல் லுக், இன்னொரு பக்கம் வெஸ்டன் அவுட்புட் இதற்கு நடுவில் திடீரென 80ஸ்க்கு போயிட்டு வரலாம் வாங்க என்று கிளம்பி விட்டார்கள் நடிகைகள். சின்னத்திரை, வெள்ளித்திரை என பல நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை 80ஸ்களின் ஸ்டைலில் மாற்றி வெளியிட்டு வருகிறார்கள்.

புடவை, பெரிய முடி, விண்டேஜ் மேக்கப், பழைய காலத்து கார், மர வீடு, பழைய கேமரா டோன் என பார்த்தாலே இது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டா இல்ல 1985 இல் எடுக்கப்பட்ட ஆல்பமா என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் பல புகைப்படங்களை எஐ உதவியுடன் உருவாக்கப்பட்டவை என்பதையும் நடிகைகள் தங்களுடைய பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

film actresses

இது ஒரு ஒரு நடிகையின் முயற்சி கிடையாது. தற்போது இன்ஸ்டாகிராமில் ரெட்ரோ விண்டேஜ் 80ஸ் ஸ்டைல் புகைப்படங்கள் ஒரு ட்ரெண்டாகவே மாறி இருக்கிறது. உதாரணத்திற்கு நந்திதா ஸ்வேதா பழைய காலத்து ஹீரோயின்களை நினைவுப்படுத்தும் விண்டேஜ் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பல ரசிகர்கள் அதைக் கொண்டாட தொடங்கி விட்டனர். அடுத்த நொடி சோசியல் மீடியா முழுக்க இப்போ சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகள் போட்டி போட்டு பழைய காலத்து போட்டோக்களை குவிக்க தொடங்கி விட்டார்கள்.

80, 90 காலகட்டத்தில் கதாநாயகிகள் கெட்டப்பை இப்போ ஏஐ உதவியுடன் பலரும் தங்களுக்கே உரித்தாக மாற்றிவிட்டார்கள். இவர்கள் குவிக்கும் போட்டோக்களை பார்த்தால் இது கல்யாண வீட்டில் எடுத்த பழைய ஆல்பத்தை யாரோ இன்ஸ்டாவில் அப்லோட் பண்ணிட்டாங்களா? என்று பார்க்க வைக்கிறது. இதில் சின்னத்திரை நடிகை கேப்ரில்லா ஒரு பதிவும் வைரல் ஆகி வருகிறது. அதில் 80களில் நான் எப்படி இருந்திருப்பேன் என்று கேள்விக்கு ஐ இதோ உங்களுக்கான 1985 வருஷம் கேப்ரில்லா என்று கொண்டு வந்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்.

film actresses

ஒரு காலத்தில் பழைய காலத்து போட்டோ எடுக்க ஸ்டூடியோவுக்கு போய் பின்னால் பூங்கா படம் வைத்து போஸ் கொடுக்க வேண்டிய நிலை. இப்போது ஏஐ-யிடம் இரண்டு வார்த்தை சொன்னால் போதும் வீட்டை விட்டு வெளியே போகாமல் 1985 க்கு சென்று வந்து விடலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் நடிகைகள் எல்லோரும் புகைப்படத்தை 80ஸ் ஹீரோயினிகள் போல மாற்றி அதற்கு இளையராஜா பாடல்களை ஒழிக்க விட்டு ட்ரெண்ட் செய்கிறார்கள். இது இளையராஜா கண்ணில் பட்டால் காப்பி ரைட் கேட்டால் பிரச்சனையாகிவிடும் பார்த்துக்கோங்க என்று நெட்டிசன்கள் செல்லமாக கலாய்க்கிறார்கள்.

மொத்தத்தில் இன்ஸ்டாகிராமை திறந்தால் மட்டும் ஒன்று தெளிவாக தெரிகிறது, காலண்டரில் 2026 ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் நடிகைகள் மட்டும் 1985இல் செம பிஸியாக இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+