Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ஆனந்தராஜின் மகன் மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா? ஆதரவற்ற குழந்தைகளுக்காக செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லன் நடிகர் ஆனந்தராஜ் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதிலும் ஆனந்தராஜ் குடும்பம் ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து இருக்கின்றனர்.

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

இது குறித்த புகைப்படங்கள் வெளியானதும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் வில்லன் நடிகர்களில் ஒருவராக நடிகர் ஆனந்தராஜும் இடம் பிடித்திருப்பார். இவர் அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பலருடைய மனதையும் கவர்ந்திருக்கிறார். அதிலும் இவர் பேசும் வசனங்கள் மற்றும் உடல் மொழி அசைவுகள் கூட வேற லெவலில் இருக்கும்.

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

அந்த வகையில் நடிகர் ஆனந்தராஜ் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பாண்டிச்சேரி தானாம். இவருடைய தந்தை இவரை போலிஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று ஆசையோடு அதற்காக பட்டப்படிப்பை படிக்க வைத்திருந்தாராம். ஆனால் அப்போது ஆனந்தராஜுக்கு நடிகராக வேண்டும் என்று அதிகமான ஆர்வம் இருந்திருக்கிறது.அதனால் அதற்கான முயற்சிகளை தான் அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இவர் கேட்காமல் தன்னுடைய ஆசையில் உறுதியாக இருக்க, பிறகு குடும்பத்தினரும் அவருக்கு உதவ தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் சென்னையில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் உடன் அங்கு படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

8 பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த நடிகர் ஆனந்தராஜ் வீட்டினரின் சம்மதத்தோடு திருமணமும் செய்து இருக்கிறார். அதற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் பிறந்திருக்கின்றனர். அது போல முதல் முதலாக ஆனந்தராஜ் "ஒருவர் வாழும் ஆலயம்" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து புலன்விசாரணை, பாலைவனப் பறவைகள், மாநகர காவல் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் மூவேந்தர், சிம்ம ராசி, சூரிய வம்சம், பாட்டாளி, வானத்தைப்போல, கண்ணுபட போகுதய்யா, நரசிம்மா, பாக்ஷா என பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதிலும் சூரிய வம்சத்தில் இவருடைய நடிப்பு வேற லெவலில் இருக்கும்.

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

நடிகர் சரத்குமார் கதாபாத்திரத்துக்கு இணையாக இவருடைய நடிப்பும் இருந்ததாலேயே அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்த பல திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் வில்லனாக மட்டுமல்லாமல் காமெடியனாகவும் இப்போது நடந்து வருகிறார் இந்த நிலையில் தன்னுடைய மகன் மற்றும் மகளோடு சேர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

முதல்முறையாக நடிகர் ஆனந்தராஜ் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. அத்தோடு நடிகர் ஆனந்தராஜ்க்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுபோல இவர் சினிமாவில் பார்ப்பதற்கு தான் வில்லனாக இருக்கிறார். ஆனால் நிஜத்தில் இவ்வளவு நல்லவரா? என்று இவருக்கு வாழ்த்துகளும் குவிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+