நடிகர் மகாநதி சங்கரின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா? இந்த பிரபலம் தான் மனைவியா?
சென்னை: நடிகர் சங்கர் கமல் நடித்த மகாநதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரைக்கும் மகாநதி சங்கர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் மகாநதி சங்கர் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மகாநதி சங்கர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சிலருக்கு தான் தாங்கள் நடித்து பிரபலம் அடைந்த திரைப்படங்களின் பெயர்கள் அடைமொழியாக மாறிவிடுகிறது. அந்த மாதிரி தான் நடிகர் மகாநதி சங்கரும் வந்திருக்கிறார். நடிகர் கமல் நடித்த மகாநதி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே தனக்கான ஒரு அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
அதற்கு பிறகு நடிகர் ரஜினியோடு பாட்ஷா திரைப்படத்திலும், நடிகர் சரத்குமாரின் ரகசிய போலீஸ், கமலஹாசன் உடன் இந்தியன் திரைப்படம், அதுபோல அஜித்தின் தீனா உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் பல வருடங்களாக ஓடி அனைவருடைய மனதை கவர்ந்த நாதஸ்வரம் சீரியலிலும் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
அதுபோல தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக இவர் சினிமா சீரியல் என வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவருடைய நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு பாசக்கார குடும்ப தலைவனாக தான் இருந்து வருகிறாராம்.

சமீபத்தில் மகாநதி சங்கர் தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் மற்றும் தன்னுடைய மனைவியோடு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகாநதி சங்கருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதுபோல நடிப்பு என்று வந்துவிட்டால் இவர் வில்லத்தனத்தை காட்டும் நிலையில், தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களில் பவ்யமாக இருப்பதை பார்த்து இவரா அப்படி என்று வியந்து கேள்விகளை குவிக்கின்றனர்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications