பாடகர் கார்த்தியின் குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா? மனைவி இந்த பிரபலம் தானா? வெளியான க்யூட் வீடியோ
சென்னை: பாடகர் கார்த்திக் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்களை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கார்த்திக்கின் குழந்தைகள் இவ்வளவு பெரியவர்கள் ஆக இருக்கிறார்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதோடு பாடகர் கார்த்திக்கு 42 வயது ஆகிறதாம். அவருக்கு திருமணம் முடிந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால் இதை நம்ப முடியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக இருந்து வருபவர் தான் கார்த்திக். இவர் சென்னையை சேர்ந்தவர்தான். ஆரம்பத்தில் ரகுமானுடன் துணைப்பாடகராக பணியாற்றி வந்த கார்த்தி பிறகு அவருடைய இசை அமைப்பிலேயே பல பாடல்களை பாட தொடங்கி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பல இசை அமைப்பாளர்களும் விரும்பும் பாடகராக மாறி இருக்கிறார். இப்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் பல பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார். அதிலும் கார்த்திக் முதல் முறையாக பாய்ஸ் திரைப்படத்தில் பாடிய "எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா" என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. பல இளைஞர்கள் அந்த நேரத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக இருந்தது.
அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிரட்டலாக இருந்த கஜினி திரைப்படத்தில் "ஒரு மாலை இலை உதிர் காலம்" என்ற பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. அத்தோடு வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இடம்பெற்ற "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல" பாடல் இப்போது உள்ள காதல் ஃபெயிலியர் கூட பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி பல ஹிட் பாடல்களை பாடி வந்த கார்த்திக்கு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 8000 பாடல்களுக்கு மேலே பாடி இருக்கிறாராம். அதோடு இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்ளும் போட்டியாளர்களிடம் தன்னுடைய பாடல் திறமையால் பக்குவமாக அவர்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கார்த்தி கடந்த 2006 ஆம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதோடு சமீபத்தில் கார்த்திக்கின் திருமணநாள் அன்று தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்களை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதை பார்த்து அதிகமான ரசிகர்கள் உங்களுக்கு 42 வயது ஆகிவிட்டதா? அதுவும் உங்களுக்கு திருமணம் முடிந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications