ஹார்ட் பீட் சீரிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. மூன்றாவது சீசன் எப்போ தெரியுமா? வெளியான தகவல்
சென்னை: தமிழ் திரையுலகில் சமீப ஆண்டுகளில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த முக்கியமான சீரிஸ்களில் ஒன்றாக Heart Beat உருவெடுத்துள்ளது. இந்த சீரிஸ் வெளியான முதல்நாளிலிருந்தே இளைஞர்கள் முதல் குடும்ப பார்வையாளர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சீரிஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அப்டேட் கிடைத்திருக்கிறது.

ஹார்ட் பீட் சீரிஸ்
இயக்குநர் தீபக் சுந்தர்ராஜ் இயக்கத்தில், டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த சீரிஸில் அனுமோல், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எமோஷனல், காதல், குடும்ப உறவுகள், வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகியவற்றை நெருக்கமாக எடுத்துக் காட்டிய இந்த சீரியஸ், அதன் கதையம்சத்தாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது.
ஒரு மருத்துவமனைக்குள் நடக்கும் பல சம்பவங்களையும், பிரிந்த காதலர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவர்களுடைய குழந்தைகளின் வாழ்க்கை போன்ற பல விஷயங்களை மையப்படுத்தி தான் இந்த சீரிஸ் பயணித்து வந்தது
இரண்டாவது சீசன்
Heart Beat 2 கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி 100 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. ஆனால் அந்த முடிவு ஒரு சாதாரண முடிவாக இல்லாமல், அடுத்த சீசனுக்கான பல கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்தது. அதிலும் ரீனாவிற்கு ரதி தான் அம்மா என்பது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தாலும் விஜய் தான் தன்னுடைய தந்தை என்பது கடைசி நேரத்தில் தெரிந்தது. அந்த உண்மை தெரிந்த சந்தோஷத்தில் அவர் வரும்போது அவருக்கு விபத்து நடந்து விட்டது. பிறகு தன்னுடைய மகள் தான் ரீனா என்பது விஜய்க்கும் தெரிந்து விட்டது.
உயிருக்கு போராடி கொண்டிருந்த ரீனாவிற்கு விதிகளை மீறி விஜய் சிகிச்சை செய்திருந்தார். அதனால் என்ன ஆச்சு என்று தெரியாமலேயே கதையை முடித்து வைத்திருந்தனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் எதிர்பார்ப்பாக இருந்தது. மூன்றாவது சீசன் எப்போது வரும் அதில் ரீனா பிழைப்பாரா? விஜய் நிலைமை என்ன என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்போது இதுகுறித்து ஒரு ஸ்பெஷல் அப்டேட் கிடைத்திருக்கிறது.

ஹார்ட் பீட் 3
அதாவது, இந்த தொடரின் மூன்றாவது சீசன் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாக தொடங்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதிருந்தாலும், ரசிகர்களிடம் இது பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது சீசன் முடிவில் இருந்து காத்திருந்த பார்வையாளர்கள், இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?
Heart Beat தொடருக்கு கிடைத்த வரவேற்புக்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது, கதை சொல்லும் விதம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்தன்மை கொடுத்து, அவர்களின் வாழ்க்கை பயணத்தை நுணுக்கமாக எடுத்துக் காட்டிய விதம் ரசிகர்களை ஈர்த்தது.
இரண்டாவது, உணர்ச்சி. குடும்ப உறவுகள், காதல், பிரிவு, மீண்டும் இணைவு போன்ற உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியதால், பலர் தங்கள் வாழ்க்கையுடன் இந்த தொடரை தொடர்புபடுத்திக் கொண்டனர். மூன்றாவது, கிளைமாக்ஸ். இரண்டாவது சீசனின் முடிவு பல கேள்விகளை விடுத்து சென்றதால், மூன்றாவது சீசனுக்கான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்துள்ளது.
மொத்தத்தில், Heart Beat 3 குறித்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷ செய்தியாக மாறியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்திருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications