Heart Beat: ஹார்ட் பீட் சீரிஸில் இந்த வாரம் ஹார்ட்டை எகிற வைத்த காட்சி! விஜய்க்கு தெரிந்த உண்மை! இனி நடப்பது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்திருக்கும் 'ஹார்ட் பீட்' வெப் சீரிஸின் இந்த வார எபிசோட், மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமானத் திருப்பங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த வாரம், ரீனாவுக்கு ஏற்பட்ட விபத்தால், 'சீரியஸை இப்படியே முடித்துவிடுவார்களா?' என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், இந்த வாரம் வெளியானக் காட்சிகள் கண்ணீரையும், எதிர்பார்ப்பையும் ஒருசேரக் கிளப்பியுள்ளன.

Heart Beat Disney Hotstar

மொத்த ட்விஸ்ட்டும் உடைந்தது

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப் சீரிஸ் முதல் பாகம் முடிவடைந்ததை தொடர்ந்து சில வாரங்களிலேயே இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டது. அதில் ரீனாவும் அர்ஜுனும் திருமணம் செய்யப் போவதாக ரதியிடம் சொல்ல போன இடத்தில் தான், விஜய் தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை ரதி மூலமாக ரீனாவுக்குத் தெரிய வருகிறது. இந்த உண்மையை அர்ஜுனிடம் சொல்லப் போகும் ரீனாவுக்கு, அர்ஜுனுக்கு ஏற்கெனவே இந்த விஷயம் தெரியும் என்ற உண்மை தெரிய வர, ரீனா அதிர்ச்சியில் நிற்கும்போது, ஒரு விபத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்கிறாள்.

மருத்துவமனை போராட்டம்

அர்ஜுன், ரீனாவை மருத்துவமனையில் சேர்க்கும் காட்சிகள், ரசிகர்களைப் பதற்றத்தில் ஆழ்த்தின. தற்போது, ரீனாவின் உடலில் பலப் பிரச்சனைகள் இருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், விஜயகாந்த் வரவேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால், விஜய் மீது ஏற்கெனவே வழக்கு இருப்பதால், அவர் இப்போது யாருக்கும் சிகிச்சை செய்யக் கூடாது என்று போலிஸ் ஸ்டேட்டாக சொல்லியிருக்கின்றனர்.

விஜயின் உணர்ச்சி வெடிப்பு

இப்படியானப் பரபரப்பானச் சூழலுக்கு மத்தியில், ரீனாதான் தன்னுடைய மகள் என்ற உண்மை விஜய்க்குத் தெரிய வருகிறது. இதுதான் இந்த வெப் சீரிஸின் உச்சக்கட்ட உணர்ச்சிப் பெருக்காக அமைந்துள்ளது. உடனே விஜய் ரதியிடம் "நீ நம்ம பொண்ணு இறந்து போயிட்டேன்னு சொன்ன. நான் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட நம்ம பொண்ணைப் பத்திப் பேசும்போது உன் கண்களில் எந்த ஒரு வருத்தமும் இல்லையே என்று நான் யோசித்தேன். ஆனால், இப்போதுதான் அதற்கான உண்மையானக் காரணம் தெரிந்தது. எதுக்காக என்கிட்ட ஏமாத்துனீங்க? எதுக்காக நடிச்சீங்க?" என்று விஜய், ரதியிடம் கோபப்பட்டுச் சண்டை போடுகிறார்.

அழுத ரதி

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் ரதியும், அவருடைய அப்பாவும் அழுது கொண்டிருக்கின்றனர். ஒருபக்கம், இத்தனை வருடங்களாகத் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி விஜய்க்கு வந்த கோபம், மறுபக்கம் தன் மகள் உயிர் காக்கப் போராடும் நிலை-இந்த உணர்வுபூர்வமானக் காட்சிகள், ரசிகர்களைக் கண்கலங்க வைத்திருக்கின்றன.

தந்தையின் இதயம் மகளுக்குள்

இந்தக் காட்சிகளைத் தொடர்ந்து, அடுத்து என்ன ட்விஸ்ட் வரப்போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், சில தகவல்களும் வெளியாகி இருக்கிறது. சட்டச் சிக்கலால் சிகிச்சை அளிக்க முடியாமல் தவிக்கும் விஜய், எப்படியும் ரீனாவுக்குத் தன்னுடைய இதயத்தைக் கொடுத்துக் (Heart) காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் Heart Beat

தன்னுடையத் தந்தை யார் என்று தெரியாமல் இத்தனை நாட்களாகத் தவித்துக் கொண்டிருந்த ரீனா, இனி தன்னுடையத் தந்தை உடலுக்குள்ளேயே இருப்பதாக உணர்ந்து 'Heart Beat' என்றுச் சொல்வது போல இந்த வெப் சீரிஸ் முடிவடைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எமோஷனல் க்ளைமேக்ஸை இயக்குனர் வைத்திருந்தால், அது மிகப்பெரிய வெற்றிப் பெறும்.

கார்த்திக்கின் மறுபிரவேசம்

இந்த வெப் சீரிஸில் விஜயாக நடித்து வரும் நடிகர் கார்த்திக்கின் நடிப்பு, அவ்வளவு இயல்பாகவும், தத்ரூபமாகவும் இருந்தது. இவருக்கு 'யாரடி மோகினி' திரைப்படம் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பிறகுப் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வெப் சீரிஸ், இவரை மீண்டும் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அவர் காட்டும் உத்வேகம், இந்தத் தொடருக்கு மிகப்பெரியப் பலம்!

அப்பா யார் என்று தெரியாமல் தவித்த ரீனாவின் நிலை, தற்போது உயிரைக் கொடுக்கும் தியாகத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இயக்குனர் என்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார் என்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+