Heartbeat 2 climax: உயிர் பிழைத்த ரீனா அப்பாவுடன் இணைந்த மறுநிமிடம்! ஹார்ட் பீட் 2 கிளைமாக்ஸில் அதிர்ச்சி ட்விஸ்ட்
சென்னை: ஜியோ டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான வெப் தொடர்களில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் சீரிஸாக மாறியுள்ள தொடர் 'ஹார்ட் பீட்'. மருத்துவ துறையையும், உறவுகளின் சிக்கல்களையும் மையமாக கொண்ட இந்த காதல் மற்றும் எமோஷனல் டிராமா, தற்போது அதன் சீசன் 2ன் கிளைமாக்ஸ் எபிசோடை வெளியிட்டுள்ளது. யாரும் எதிர்பாராத ட்விஸ்டுடன் முடிந்துள்ள நிலையில், 'ஹார்ட் பீட்' சீசன் 3 வருவதையும் இயக்குநர் உறுதி செய்துள்ளார்.

ஹார்ட் பீட் சீசன் 2 கதைக்களம்
'ஹார்ட் பீட்' சீரிஸ் மருத்துவ உலகில் நடக்கும் காதல், தொழில் போட்டி, மற்றும் குடும்ப உறவுகளின் சிக்கல்களை பேசுகிறது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து, 2வது சீசன் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் ஹாட்ஸ்டாரில் டெலிகாஸ்ட் ஆகி வந்தது. ரீனாவுக்கு விஜய் தான் தன்னுடைய அப்பா என தெரிந்த பின்பு, கடந்த வார எபிசோடில் ரீனா கார் விபத்தில் சிக்கினார். அர்ஜூன் ரீனாவை காப்பாற்றி ஆஸ்பிட்டலில் சேர்த்தான். ராக்கி, தேஜூ, குணா, நவீன் என எல்லோரும் ரீனாவை காப்பாற்ற முயற்சித்தனர். ரீனாவின் அம்மாவான டாக்டர் ரதி, குற்ற உணர்ச்சியில் கதறி துடித்தார். கடைசியில் விஜய்க்கும் ரீனா தான் தன்னுடைய மகள் என தெரிய வந்தது.
கிளைமாக்ஸில் அரெஸ்ட் ஆன அப்பா
இன்றைய எபிசோட் ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காதத் திருப்பங்களை கொண்டிருந்தது. இந்த வார எபிசோடில், தடையை மீறி தனது மகளை காப்பாற்ற ஆப்ரேஷன் செய்கிறார் விஜய். ரீனாவும் உயிர் பிழைக்கிறார். உயிர் பிழைத்து வந்த ரீனா, தனது அப்பாவை பார்த்து, "அப்பா, அப்பா" என கூப்பிட, 25 ஆண்டுகள் கழித்து அப்பாவும் பொண்ணும் இணைந்து விட்டனர் என எல்லோரும் நினைக்கின்றனர்.

இயக்குநரின் அதிர்ச்சி ட்விஸ்ட்
ஆனால், இயக்குநர் அங்கும் ஒரு ட்விஸ்ட் வைத்தார்! தடையை மீறி ஆப்ரேஷன் செய்ததால் விஜய்யை போலீஸ் அரெஸ்ட் செய்ய, ரீனா அப்பா, அப்பா எனக் கதறிக்கொண்டே கோமாவுக்குச் சென்று விடுகிறார்! ரதியும் அர்ஜூனும் கதறித் துடிக்கின்றனர்.
சீசன் 3 உறுதி
ரசிகர்களும், "ரீனாவுக்கு மட்டும் ஏன் இப்படி?" எனத் துடிக்க, இந்தக் கேள்விக்கு பதில் 'ஹார்ட் பீட் சீசன் 3-ல் கிடைக்கும் என எண்டு கார்டு போடுகிறார் இயக்குநர். ஆம், 2026 ஆம் ஆண்டு 'ஹார்ட் பீட் சீசன் 3 வரப்போகிறது என்பதை இந்த கிளைமாக்ஸில் இயக்குநர் உறுதி செய்துவிட்டார். இதனால் ரசிகர்கள் செம்ம ஹேப்பி ஆகிவிட்டனர்.
நடிகர்களின் பார்வை
இந்த வெப் சீரிஸின் வெற்றிக்கு பிறகு, இந்த தொடரில் நடித்த பல நடிகர்கள், இது குறித்து பேசியுள்ளனர். குறிப்பாக, சிக்கலான உறவுகளின் பாசத்தை இந்த சீரிஸ் மிக ஆழமாக பேசியதாக அவர்கள் குறிப்பிட்டனர். ரீனா, விஜய், டாக்டர் ரதி போன்ற பாத்திரங்களின் உணர்வுப்பூர்வமானக் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டன. ரீனாவுக்கு ஏன் இப்படி நடந்தது, விஜய் போலீஸில் இருந்து மீண்டாரா, கோமாவில் இருக்கும் ரீனாவுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு விடைத் தேட ரசிகர்கள் ஆர்வத்துடன் 2026 ஆம் ஆண்டுக்காக காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications