நாய் விரட்டினா பக்கத்து தெருவுக்கு போறதுக்கு கூட நான் விசா எடுக்கணுமா? நீயா நானா கோபிநாத் கேள்வி
சென்னை: நாய் விரட்டுதுன்றதுக்காக பக்கத்து தெருவுக்கு போறதுக்கு நான் விசா எடுத்துட்டு போகணுமா என படவா கோபியிடம், நீயா நானா கோபிநாத் சரமாரி கேள்வி எழுப்பினார். விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில்தான் இந்த விவாதம் நடந்தது.
வாரந்தோறும் முக்கிய டாப்பிக்குகளை எடுத்து நீயா நானாவில் விவாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைச கோபிநாத் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தெருநாய்கள் கடித்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இறக்கும் அபாயம் உள்ளது. இதனால் தெருநாய்களை காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.

அந்த வகையில் இந்த வாரம் நீயா நானாவில் தெரு நாய்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது தெருநாய்கள் இல்லாத நகரம் வேண்டும் வெர்சஸ் தெருநாய்களுக்கு உரிமை உண்டு என்ற கருப்பொருளை கொண்டு விவாதம் நடந்தது. இதில் தெரு நாய்களுக்கு ஆதரவாக படவா கோபி, நடிகை அம்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு நேரங்களில் தனியே வரும் போது தெருநாய்கள் துரத்துவது, சில நேரம் கடிப்பது, குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் இருந்து இடறி விழுவது போன்ற பிரச்சினைகளை சந்திப்பதாக பலர் முன் வைத்தனர்.
அப்போது படவா கோபி, "இரவு நீங்க நாய்கள் இருக்க இடத்திற்கு போனாலே நாய் விரட்டுவது வழக்கம். அதுதான் அதோட குணம்" என்றார். அதற்கு கோபிநாத், "அதுக்காக பக்கத்து தெரு போறதுக்கு நான் விசா எடுத்துட்டு போணுமா? நான் எங்க போணும்னு நான்தான் முடிவு செய்யணும்.
நாய்க்காக நான் செய்ய வேண்டிய வேலையை மாற்ற முடியுமா? காவல் காக்குறது அரசாங்கத்தோட வேலை" என தெரிவித்திருந்தார். அது போல் தெருநாய்கள் இருக்கும் இடத்தில் திருட்டுகள் நடப்பதில்லை என்றும் படவா கோபி தெரிவித்தார்.
இதற்கு கோபிநாத், "நைட்ல் திருடங்க வந்தால் தெருநாய் அவங்கள தடுக்கும்னு சொல்றீங்க சரி. இப்போ சென்னைல போட் கிளப்பில் நிறைய பணக்காரங்க இருக்கும் தெருக்களில் நான் தெரு நாயையே பார்த்தது கிடையாது. ஆனால் அங்க கடைசியா எப்போ திருட்டு நடந்துச்சி? திருடர்கள் வராம தடுக்கிறது அரசாங்கத்தோட வேலை, நாயோட வேலை இல்லை" என்றார். இதற்கு "தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும்" என்ற அணியினர் கை தட்டி வரவேற்றனர்.
அது போல் கோபிநாத், அம்முவிடம் "உங்க ஏரியாவுல இருக்கிற எல்லா நாயும் உங்க நாய்ங்க தான" என கேட்டார். அதற்கு அம்மு "ஆமா" என்றார். அதற்கு கோபி, " அது யாரையாவது கடிச்சா நீங்கள் பொறுப்பேத்துக்குவீங்களா" என கேட்டதற்கு அம்மு, "கண்டிப்பாக முடியாது, அதை அரசாங்கம்தான் ஏத்துக்கணும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications