பிறந்தநாளன்று கதறி அழுத ஹேமா!
சென்னை: வில்லி வேடம் நடிச்சா என்ன.. அவர்களும் பெண்கள்தானே.. அவர்களுக்கும் மனசில் ஈரம் இருக்கத்தானே செய்யும்.. அப்படிப்பட்ட கேரக்டர்தான் நம்ம ஹேமா.. இவங்க தன்னோட பிறந்த நாளை பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் கொண்டாடியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டாங்களாம்.
சினிமாக்களை விடவும் சின்னத்திரைக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் இருக்காங்க. சின்னத்திரையில் புதுமுகங்கள் வந்தாலும் தங்களுக்கு பிடித்த மாதிரி கேரக்டரில் நடித்திருந்தா அவர்களை அந்த கேரக்டராவே நம்பி ரசிக்கத் தொடங்கி விடுகிறார்கள் ரசிகர்கள்.
இப்பல்லாம் சீரியல்களில் வில்லி கேரக்டரையும் ரொம்ப ரசிக்கிறார்கள். ஏனென்றால் வில்லிகளும் அழகான வில்லிகளாக வருவதாலோ என்னவோ. அது போல தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்திருக்கும் ஹேமாவை முதலில் ரசிகர்கள் திட்டினாலும் இப்போ அவரை நன்றாக ஏத்துக்க தொடங்கிட்டாங்க.

குடும்பக் கதை
பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் வரும் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுப்பதாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்ததாக தான் இருக்கிறது. விஜய் டிவியில் பரபரப்பாக ஓடும் சீரியலில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. காரணம் இதில் நடித்திருக்கும் நடிகர்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்கள்.

3வது தம்பி பொண்டாட்டி
அதுபோல அந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடித்திருக்கும் ஹேமா அந்த வீட்டின் மூன்றாவது தம்பியின் மனைவி. அவர் வீட்டிற்குள் வந்ததும் குடும்பத்தை பிரிப்பது போல் நடந்துகொள்வார். ஆனால் போகப்போக அவருடைய குழந்தைத்தனமான நடவடிக்கை ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. இந்த சீரியல் மூலமாக ஹேமாவிற்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகியிருக்கிறது தான் சொல்லவேண்டும்.

பொண்ணூஞ்சல்
ஹேமா பொண்ணுஞ்சல் குலதெய்வம் ஆபீஸ் களத்து வீடு சின்னத்தம்பி அப்படி பல சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோரில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் இவருக்கு ஒரு ரொம்ப சந்தோஷமான விஷயமும் கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் இவர் கர்ப்பமாக இருப்பது போல் யதார்த்தமாக சீன் வந்திருக்கிறது. ஆனால் இவர் இப்போது உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறார்.

கர்ப்பிணியாகவே நடிப்பு
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் ஹேமா. இதனால் அவர் மட்டுமல்லாமல் யூனிட்டே ஹேப்பியாக இருக்கிறதாம். இந்த லாக்டோன் டைம்ல படப்பிடிப்புகள் நிறுத்தி இருந்தது இப்போ கொஞ்சம் தளர்வுகள் கொடுத்து சீரியல்கள் அரசின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்புடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஹேமா நிறைமாதமாக இருந்தாலும் சீரியலுக்கு வந்திருக்கிறார்.

பிறந்த நாள் மகிழ்ச்சி
அவரின் பிறந்த நாளன்று சீரியல் படப்பிடிப்பு தொடங்கியது சூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கும் அந்த சீரியலில் தனமாக நடிக்கும் சுசித்ரா வைக்கும் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இருவருக்கும் தனித்தனியே கேக் வெட்டி ஆரவாரத்துடன் சந்தோஷமாக கொண்டாடிய தருணத்தை உடன் முடிந்து போகவில்லை பிறந்தநாள் கொண்டாட்டம். அவரின் உறவினர்களும் நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி ஆசீர்வதித்து இருந்தனர்.

போனில் வந்த வாழ்த்து
அதில் ஒரு சர்ப்ரைஸ் காலும் அவருக்கு வந்திருக்கிறது அதில் அவருடைய பிரண்டு ஃபேமிலி நேரில் பார்க்க முடியாததால் போனில் வாழ்த்து சொல்லி இருந்தனர் அதுவும் பாடல் மூலமாக வாழ்த்து சொன்னார். அவங்க பாடும் போது உணர்ச்சிவசப்பட்டு ஹேமா அழுது விட்டார். இது இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. அதில் நிறை மாத நிலவே வா வா நடை போடு மெதுவா மெதுவா பாடல் பாடியுள்ளார்.

உணர்ச்சிவசப்பட்டு அழுகை
அதைக் கேட்டு ஹேமா அவர் உணர்ச்சி வசப்பட்டது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாகி விட்டது. மாசமா இருக்கிற இந்த நேரத்தில் அதுவும் பிறந்தநாளன்று அவரை அழ வைத்து விட்டீர்களே என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். ஆனாலும் இது சந்தோஷ அழுகைதானே என்று பல ரசிகர்கள் ஹேமாவுக்கு ஆறுதலும், கூடவே வாழ்த்துகளையும் அதிகமாகவே அள்ளி வழங்கியுள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications