Hema: தயவு செய்து இப்படி பண்ணாதீங்க! ஆதங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, திருமாவளவன் ரியாக்சன்
சென்னை: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹேமா ராஜ்குமார், தற்போது சினிமா உலகில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்துப் பேசியது, கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஆடிஷனில் ஏற்பட்ட பாகுபாடு மற்றும் ஊடகச் சந்திப்புகளில் நடிகைகளை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

ஹேமாவின் குமுறல்
நடிகை ஹேமா ராஜ்குமார், கமல் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெல்லை பாய்ஸ்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆணவக் கொலைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், திருநெல்வேலி மீது சுமத்தப்படும் விமர்சனங்களை நீக்கும் வண்ணம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. நேற்று (நவம்பர் 17) நடைபெற்ற இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் ஹேமா இவ்வாறு மனம் திறந்து பேசினார்.
இயக்குநருக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் பேசிய ஹேமா, "எந்த ஒரு படத்தின் கதையையும் எவ்விதக் குறுக்கீடும் இல்லாமல், தான் எடுக்க நினைத்ததை உருவாக்கி அதனை வெளியிடுவது தான் ஒரு இயக்குநரின் வெற்றி என நான் நினைக்கிறேன். அதை இயக்குநர் கமல் ஜி செய்திருக்கிறார்" என்று பாராட்டினார்.
சினிமாவே வேண்டாம் என்ற மனநிலை
இந்தப் படத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி தெரிவித்த ஹேமா, தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு சிறிய வேண்டுகோளை வைப்பதாகக் கூறி, தனது சோகமான ஆடிஷன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். "நான் நிறைய படங்களின் ஆடிஷன்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது என்கிட்ட 'சீரியல் நடிகை தானே நீங்கள்?' என எங்களை ஒரு வரிசையில் தனித்துவப்படுத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட கேரக்டர்களைத்தான் வழங்குவார்கள். அந்த ஒரு விஷயத்தால் 'இனிமேல் சினிமாவே நடிக்கக் கூடாது' என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்."
"சீரியலே எனக்குப் போதும். அங்கேயே நான் ராணியாக இருந்து கொள்கிறேன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். சீரியலில் நடிக்கும் பல பிரபலங்கள் நல்ல திறமைகளுடன் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெரிய திரை நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என்ற பிரிவினை கிடையாது. தயவுசெய்து சீரியலில் நடிப்பவர்களுக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுங்க" என ஹேமா கேட்டுக்கொண்டார்.
கேள்விகளால் பயந்த நடிகை
ஆடிஷன் அனுபவங்களுக்குப் பிறகு, தற்போது ஊடகச் சந்திப்புகளில் நடிகைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் குறித்தும் ஹேமா பேசியது, பலரின் கவனத்தையும் ஈர்த்தது. "நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது ஒருவித பயத்துடன் தான் வந்தேன். ஏனென்றால், இந்த இசை வெளியீட்டு விழாவில் 'உங்கள் எடை எவ்வளவு?', 'ஏன் இந்த மாதிரி உடை அணிந்து வருகிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்புகிறார்கள். அதனை நினைத்து பயந்துவிட்டேன்."
"நான் ஒரு செய்தியாளராக இருந்து நியூஸ் வாசித்துதான் இன்று நடிகையாக வந்திருக்கிறேன். ஆனால், இப்போ கேட்கிற கேள்விகளைப் பார்க்கும்போது என்னையே இப்படி கேட்கிறாங்களே என்று வருத்தமா இருக்கு. சமீபத்தில் நடக்கும் செயல்களைப் பார்க்கும்போது வேதனையா இருக்கு." செய்தியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் எல்லோரும் நண்பர்களாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருந்தால்தான் இருவராலும் அடுத்தடுத்து கட்டத்தை நோக்கிப் போக முடியும். ஆனால் சிலர் செய்யும் செயல்களைப் பார்க்கும்போது, இதுபோலப் பெண்களால் சினிமாவில் ஜெயிக்கவே முடியாதா? வரவே கூடாதா? என்றெல்லாம் சிந்தனை வருகிறது" என்று வேதனையோடு ஹேமா பேசிக் கொண்டிருந்தார்.
திருமாவளவனுக்கு பாராட்டு
இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மக்களவை எம்.பி. தொல். திருமாவளவன் அவர்கள், ஹேமா பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தார். பேச்சின் முடிவில் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஹேமா பேசினார். "நான் செய்திகள் வாசித்து இருந்ததால் அரசியல் பற்றியும் எனக்குக் கொஞ்சம் தெரியும். தொல். திருமாவளவன் சார் பேசிக்கொண்டிருக்கும்போது பார்த்துக்கிட்டே இருந்தேன். அவர் இப்போ உள்ள அரசியல் நிகழ்வுகளை அவ்வளவு அழகாகத் தொடர்புபடுத்திப் பேசுகிறார்" என்று பாராட்டுத் தெரிவிக்க, அவர் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஹேமாவின் இந்த வெளிப்படையான பேச்சு, சினிமா துறை நடிகைகளை எடை மற்றும் உடை குறித்து கேள்வி எழுப்பும் கலாச்சாரம் மற்றும் சின்னத்திரை நடிகர்களைப் பாகுபடுத்தும் முறை ஆகியவை குறித்துப் பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications