வடிவேலுவுடன் காமெடியில் கலக்கிய பிரபல நடிகைக்கு இத்தனை கஷ்டங்களா?.. கண்ணீரில் சீரியல் வில்லி!
சென்னை: வடிவேலுடன் மருதமலை திரைப்படத்தில் காவல் நிலையத்தில் காமெடி செய்த நடிகை பிரியங்காவின் வாழ்க்கையில் இத்தனை துயரங்கள் இருப்பதை அறிந்த ரசிகர்கள் மிகவும் மனவேதனையில் உள்ளனர்.
சினிமாவில் எந்த சீனையும் எல்லோராலும் நடிக்க முடியும். ஆனால காமெடி சீன்தான் இருப்பதிலேயே கஷ்டமானது என்பார்கள். அவர்கள் செய்யும் காமெடி படமாக்கப்படும் போதே அங்கிருப்பவர்களே சிரிக்கும் அளவுக்கு இருந்தால் மட்டுமே அது மக்களிடம் எடுபடும்.
ஒருவரை சிரிக்க வைப்பது என்பது தனி கலையாகும். அந்த வகையில் கவுண்டமணி , செந்திலுக்கு பிறகு வடிவேல், விவேக், சந்தானம் என நிறைய பேர் வந்துவிட்டார்கள். அது போல் பெண்களில் மனோரமா, கோவை சரளா உள்ளிட்ட சில நடிகைகளே காமெடி செய்துவந்தனர்.

வடிவேல்
அந்த வகையில் வடிவேலுவுடன் காமெடியில் கலக்கியவர்தான் நடிகை பிரியங்கா. காதல் தேசம் படத்தில் நடித்திருந்தார். மருதமலை படத்தில் 4 புருஷன்களை கொண்ட பெண்ணாக வடிவேலுவுடன் இணைந்து நடித்திருப்பார். இது இன்றைக்கு பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும். அது போல் காதல் கிறுக்கன் எனும் படத்தில் பஸ் ஸ்டாண்ட் காமெடி சீனையும் மறக்க முடியாது.

இரட்டை வேடம்
அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படத்தில் கன்டக்டர் அஜித்துடன் கல்லூரி பெண்கள் கேங்கில் பிரியங்கா நடித்திருப்பார். இந்த நிலையில் இவர் சின்னத்திரையில் வில்லியாக கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் கலக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே சில சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார்.

9ஆம் வகுப்பு
இந்த நிலையில் இவர் தனியார் ஊடகம் ஒன்றில் பிரியங்கா கூறுகையில், நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போதே எனது அக்கா கணவர் மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை வைத்துதான் சினிமாவில் நடித்தேன். காதல் தேசம் படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது., அதில் எனக்கு கருப்பாக மேக்கப் போட்டு ஒரு ஷாட்டையே 20 முறை எடுத்தார்கள்.

அம்மாவுக்கு கேன்சர்
குடும்ப சூழல் காரணமாக சினிமாவை விட்டு விலகினேன். இப்போது மீண்டும் வாய்ப்புகள் வருகின்றன. வடிவேல் சார் யாருனே தெரியாத போதே அவருடன் சேர்ந்து நடித்தேன். எனது திருமண வாழ்க்கை எனக்கு கைகொடுக்கவில்லை. கணவரை விவாகரத்து செய்துவிட்டேன். பல ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரையில் நடித்து வருவதும் நன்றாக இருக்கிறது. எனது அம்மா கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை கொடுத்து வருகிறோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications