ஷிவினுக்கு கடைசியில் ஏமாற்றம்.. முகத்துக்கு நேராகவே திட்டிய உள்ளே வந்த நபர்..நினைத்தது நடக்கவில்லையே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆதரவாக அவருடைய நண்பர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்து ஷிவின் தன்னுடைய அம்மா இந்த நிகழ்ச்சியில் தனக்காக வர வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவருடைய ஆசை கடைசியில் ஏமாற்றமடைந்து இருக்கிறது.
ஷிவினின் நண்பர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஷிவின் விளையாடுவதற்கும் நிகழ்ச்சிக்கு வெளியே இருக்கும் அவருடைய உண்மை கேரக்டரை பற்றியும் போட்டு உடைத்து இருக்கின்றனர்.

அம்மாவுக்காக ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 79 ஆவது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்று இந்த சீசனுக்கான ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர தொடங்கி இருக்கின்றனர். இன்று காலையில் மைனா நந்தினியின் குடும்பத்தினர் வந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது ஷிவினின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். ஷிவின் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும் போதே தான் உன்னை தன்னுடைய அம்மா ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தன்னை பார்த்த பிறகு அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்த நிகழ்ச்சியில் எனக்காக அவர் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்ததாக கூறி இருந்தார்.

தோழியின் வருகை
ஒரு ஆணாக இருந்து தற்போது பெண்ணாக மாறியிருக்கும் ஷிவின் ஆசைப்பட்டபடி அவர் மாறிவிட்டாரே என அவருடைய அம்மா ஏற்றுக்கொள்ளாமல் தான் இருப்பதாக இப்போ வரைக்கும் தெரிகிறது. காரணம் ஷிவின் ஆசைப்பட்ட மாதிரி அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவில்லை. தற்போது குடும்பத்தினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஷிவினின் நெருங்கிய தோழிதான் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய தோழியும் அவருடைய வருங்கால கணவரும் உள்ளே வந்திருக்கின்றனர். அவர்களிடம் ஷிவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் எப்படி விளையாடுகிறேன். வெளியே எப்படி மக்கள் பார்க்கின்றனர் என்று கேட்டதற்கு எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். ஆனாலும் சில தகவல்களையும் கூறி இருக்கின்றனர்.

தோழியின் அறிவுரை
ஷிவினின் தோழி நீ ஜாலியாக சிலரை கிண்டல் செய்வதாக பேசுகிறார். அது உள்ளே இருந்து பார்ப்பதற்கு தவறாக தெரியாது. ஆனால் வெளியே இருந்து பார்ப்பதற்கு தகவராக படுகிறது அதை மாற்றிக்கொள். பலர் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீ புரிந்து கொள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஏற்கனவே சில நாட்கள் ஆகவே ஷிவின், அசீம் மற்றும் சக போட்டியாளர்களிடம் பேசியது டபுள் மீனிங் வார்த்தையாக இருக்கிறது என்று அவரை குறித்து பல மீம்ஸ்களும் ட்ரோல்ஸ் வீடியோக்களும் வலம் வரும் நிலையில் அதை குறித்து ஷிவின் தோழி அறிவுரை கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 99.9% சரியாக விளையாடிக் கொண்டிருப்பதாகவும், இதே போல விளையாட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். ஷிவினை தவிர்த்து இந்த வீட்டிற்குள் பிடித்த நபர் என்றால் எனக்கு ரச்சிதாவை பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

அம்மாவைப் பற்றிய கேள்வி
இந்த நிலையில் வீட்டின் நிலவரம் எப்படி இருக்கிறது. வீட்டில் இருப்பவர்களும் பிக் பாஸ் பார்த்துக்கொண்டு தானே இருப்பார்கள் என்று உருக்கமாக கேட்க, எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை ஆனால் எல்லோரும் பார்க்க தான் செய்வார்கள் என்று அவருடைய தோழி பேசுகிறார். ஷிவின் அவருடைய அம்மாவுக்காக இந்த கேள்வியை கேட்டிருப்பது அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அவருடைய அம்மா மனமாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று அவருடைய தோழி கூறவே, பிறகு கலகலப்பாகத்தான் இருப்பது போலவே காட்டிக் கொண்டு தன்னுடைய மேக்கப் மற்றும் உடை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications