விஜய், ஜோதிகா நடிப்பு பிடிக்கும்.. காரணம்..?ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் நடிகை மைத்ரேயி நெகிழ்ச்சி!
சென்னை: இந்தியா- அமெரிக்க டீன் ஏஜ் பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மைத்ரேயி தமிழ் நடிகர்கள் பற்றி பேட்டியில் பேசியிருக்கிறார்.
கனடா நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து கனடாவிற்கு போர் காரணமாக குடிபெயர்ந்த தமிழர்கள் தான்.

இந்த நிலையில் அவர் பேட்டியில் தான் நடிப்பதற்கு ஆசைப்பட்ட காரணமே நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களும் அவருடைய நடிப்பும் தான் என்றும் மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

நம்முடைய தமிழ் நடிகை ஒருவர் பிற மொழியில் மட்டுமல்லாமல் நாடு விட்டு நாடு தாண்டி நடித்து அதிகமான ரசிகர்களையும் கவர்ந்து, யார்ரா இந்த பொண்ணுன்னு வியந்து பார்க்க வைத்த நடிகை தான் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.மைத்ரேயி ராமகிருஷ்ணன் படித்து வளர்ந்தது எல்லாமே கனடாவில் தான். நீங்க netflix பாக்குற ஆளாக இருந்தா. கண்டிப்பா அதுல இவர் நடித்த அமெரிக்கன் காமெடி சீரிஸான நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) பார்த்திருப்பீங்க. இந்த சீரியஸை இயக்குனதும் ஒரு தமிழ் பொண்ணுதான்.

நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) சீரியஸில் நடிப்பதற்காக மைத்ரேயி கிட்டத்தட்ட 15,000 பேரோடு போட்டி போட்டு பிறகு செலக்ட் ஆகி இருக்கிறார். அது மட்டும் இல்ல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே அமெரிக்காவில் நடைபெற்ற டுடே என்கிற டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உலகத்தை மாற்றி அமைக்கக்கூடிய 15 சிறுமிகளில் ஒருத்தராக செலக்ட் ஆகி இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகி தற்போது நான்காவது சீசன் netflixஇல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக "தேவி விஸ்வகுமார்" கேரக்டரில் மைத்ரேயி நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது கதாபாத்திரமும் நடிப்பும் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் மத்தியில் மைத்ரேயி பிரபலமாக வலம் வருகிறார்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தான் தமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததாகவும், "போக்கிரி", "சந்திரமுகி" திரைப்படங்கள் தனக்கு பிடித்த தமிழ் படங்கள் என்றும் கூறி இருக்கிறார். அதோடு சந்திரமுகியில் நடிகை ஜோதிகாவின் கதாபாத்திரமும், நடிப்பும் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஜோதிகாவின் படங்களும் நடிப்பும் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications