Barathi Kannamma Serial:பக்கவாதம் வீட்டில் வைத்தியமா? எந்த காலத்தில் இருக்கீங்க?
சென்னை: விஜய் டிவியின் பல சீரியல்கள் நம்மை பல வருடங்கள் பின்னோக்கி கொண்டு செல்கின்றன. அதில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று.
கண்ணம்மாவின் அப்பாவுக்கு பக்கவாதம் வந்துருது. அவரை உடனடியா ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போயி மருத்துவம் பார்க்காம வீட்டில் வச்சு மருத்துவம் பார்க்கறாங்க.
மூணு மாசத்துக்கு மாத்திரை மருந்து சாப்பிட்டா சரியா போயிரும்னு டாக்டர் சொல்றார். ரொம்ப கொடுமையா இருக்குது.

எப்படி பக்கவாதம்
மூளைக்கு போகும் ரத்த ஓட்டம் ஓரிரு இடத்தில் தடைபடும் போது ஒரு கால் கை செயல்படாமல் போவதை பக்கவாதம் என்று சொல்கிறார்கள்.. மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்குள் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றால், இரண்டு நாட்களில் பக்கவாதம் வந்தவர்கள் சரியாகி விடுவார்கள்.

தொடர்ந்து ஊசி மருந்து
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் ஊசி மருந்து செலுத்தி பக்கவாதம் சரி செய்யப்பட்டு மூன்று நாட்களில் பக்கவாதம் சரியாகி எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் கண்ணம்மாவின் அப்பாவுக்கு மாப்பிள்ளையே மருத்துவர். பெரிய மருத்துவமனை கட்டி மருத்துவம் பார்த்து வருகிறார்.

மாப்பிள்ளையை பார்த்து
கண்ணம்மாவின் அப்பாவுக்கு பக்கவாதம் வந்து இருப்பதை பார்த்துவிட்டு, மாப்பிள்ளையே வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சும்மா போகிறார். ஒரு மாத்திரை. சலைன் பாட்டில் பரிந்துரைக்கவில்லை. மருத்துவரை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லவில்லை.அவரை பார்த்துக்க நான் இங்கேயே இருக்கிறேன் என்று கண்ணம்மா கண்ணீரோடு சொல்கிறாள்.

கண்ணம்மாவையும் விட்டுவிட்டு
அப்பாவை நம்ம ஆஸ்பத்திரில சேர்க்கலாம். அங்கு வந்து நீ பார்த்துக்கோ கண்ணம்மா. நம்ம ஆஸ்பத்திரியில் எல்லாரும் உன்னுடன் இருப்பார்கள் என்று கூட ஒரு டாக்டருக்கு சொல்ல தெரியவில்லை. சரி பார்த்துக்கோ கண்ணம்மான்னு பொண்டாட்டியை அவள் வீட்டில் விட்டுவிட்டு போகிறான் ஒரு டாக்டர்.
ஒரு மருத்துவ தர்மம் தெரியாமல் அந்த கதையைத் தூக்கிக் கொண்டு சீரியல் எடுக்க வந்துவிட்டதை என்னவென்று சொல்வது? கதைக்கு என்றாலும் நியாயம் தர்மம் வேண்டாம்?
பக்கவாதம் என்றால் இப்படித்தானோ என்று மக்கள் பயந்துவிட மாட்டார்களா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications