பிரபல சேனல் ரகசியத்தை உடைத்த டிடி..எவ்வளவோ சொல்லியும் அதை செய்யல..கடைசியில் “அனிருத்” சொன்ன வார்த்தை
சென்னை: தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சையமான டிடி தன்னுடைய தொகுப்பாளர் வாழ்க்கை பற்றி பல விஷயங்களை சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நிகழ்ச்சியில் தான் எதிரே இருக்கும் பிரபலங்களிடம் தனக்கு பிடிக்காத கேள்வியை தான் கேட்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதோடு இசையமைப்பாளர் அனிருத் விஷயத்தில் சேனல் தரப்பில் இருந்து தனக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குறித்தும் பேசி இருக்கிறார்.
தொகுப்பாளர்கள் என்று சொன்னவுடன் டக்கென்று நினைவிற்கு வந்துவிடும் ஒரு சிலர்களில் டிடியும் முக்கியமானவர். இவர் பல வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக இருந்து வருகிறார். அதோடு ஒரு சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் கூட பெரிய அளவில் ஹிட்டான "காபி வித் காதல்" என்ற திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் டிடி நடித்திருப்பார். அதோடு நாளை வெளியாக உள்ள "மந்தகம்" என்ற வெப் சீரிஸிலும் டிடி நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஆரம்பத்தில் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் திரை நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் காபி வித் டிடி நிகழ்ச்சி அதிக அளவில் வரவேற்பு பெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஒருமுறை சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று ஏற்கனவே என்னிடம் ஷோ புரொடியூசர் கூறி இருந்தார்.
ஆனால் அந்தப் பேட்டி தொடங்கி முடியும் வரை டாக் பேக்கின் வழியாக அந்த கேள்வியை கேட்கும்மாறு கூறிக் கொண்டே இருந்தார். நாங்கள் ஏற்கனவே இதுகுறித்து அனிருத்திடம் கூறிவிட்டோம் அவரே ஒன்றும் சொல்லவில்லை. அதைக் கேட்பதால் உனக்கு என்ன வந்தது என்று மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் கூட நான் அந்த கேள்வியை அனிருத்திடம் கேட்கவே இல்லை.
பிறகு மற்ற கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டு நிகழ்ச்சியை முடித்து விட்டேன். எனக்கு அந்த கேள்வி தவறாக தெரிந்ததால் நான் அதை செய்ய மாட்டேன், எனக்கு சரி என்று தோன்றுவதை மட்டுமே நான் செய்வேன். அதே நேரத்தில் எனக்கு சரி என்று பட்டால் அவர்கள் சொல்லாத கேள்விகளையும் கூட சிறப்பு விருந்தினரிடம் கேட்பேன்.

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இது குறித்து அனிருத்திடம் அந்த ஷோ ப்ரொடியூசர் நாங்க எத்தனையோ முறை அந்த கேள்வி கேட்கச் சொன்னோம். ஆனால் டிடி கேட்கவில்லை என்று கூறினார். அதற்கு அனிருத் அதனால் தான் அவர் டிடி என்று பாராட்டினார் என்று டிடி பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications